தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வங்கக் கடலில் 12 மணி நேரத்தில் உருவாகப்போகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி... 11,12,13 தேதிகளில் தமிழ்நாட்டிற்கு மஞ்சள் எச்சரிக்கை! - LOW PRESSURE AREA

வங்கக் கடலில் 12 மணி நேரத்தில் உருவாகப்போகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வரும் 11,12,13 தேதிகளில் தமிழ்நாட்டிற்கு இந்திய வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்கக் கடலில் 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
வங்கக் கடலில் 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு (Image credits-Etv Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 7, 2024, 10:13 AM IST

சென்னை: வங்கக் கடலில் 12 மணி நேரத்தில் உருவாகப்போகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வரும் 11,12,13 தேதிகளில் தமிழ்நாட்டிற்கு இந்திய வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தியில், "தெற்கு வங்கக்கடலின் மையப்பகுதிகளில் அடுத்த 12 மணி நேரத்தில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வங்க கடலின் மேற்கு வடமேற்கு திசையில் நகர வாய்ப்புள்ளது. அப்படி நகரும் பட்சத்தில் வரும் 12ஆம் தேதி தென்மேற்கு வங்கக்கடலில் தமிழ்நாடு-இலங்கை கடலோர பகுதிகளை அடைய கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் தாக்கத்தால் இன்று (டிசம்பர் 7) முதல் 12 ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 11,12 ஆகிய தேதிகளில் கடலூா் முதல் ராமநாதபுரம் வரை கடலோர மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வங்கக் கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வரும் 11, 12, 13 ஆகிய 3 நாட்களுக்கு தமிழ்நாட்டிற்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் (டிசம்பர் 7,8) மாலை மற்றும் இரவு நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது,"என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிதமான மழைக்கு வாய்ப்பு: இதனிடையே சென்னை வானிலை மையம் நேற்று வெளியிட்டிருந்த வானிலை அறிக்கையில், 07-12-2024 முதல் 10-12-2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 11-12-2024: கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள், காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

12-12-2024: கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது,"என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: மேலும் சென்னை வானிலை மையத்தின் எச்சரிக்கையில், "தமிழக கடலோரப்பகுதிகளில் 06-12-2024 முதல் 10-12-2024 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை. வங்கக்கடல் பகுதிகளைப் பொறுத்தவரை 07-12-2024 அன்று தென்கிழக்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

08-12-2024: தென்கிழக்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

09-12-2024: தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

10-12-2024: தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும், மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்,"என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details