மயிலாடுதுறை:கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த டிமித்ரி - எலேனா தம்பதிகள் கணினி மென்பொருள் பொறியாளர்களாக உள்ளனர். உலகம் முழுவதும் சுற்றிவரும் இவர்கள் இந்து மதத்தில் ஆர்வம் கொண்டு கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மதம் மாறி உள்ளனர். மேலும், தமிழ் கலாச்சாரம் மீதும் கொண்ட பற்று காரணமாக, ஆண்டுக்கு ஒரு முறை தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்து தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்தும் வருகின்றனர்.
இந்நிலையில், கிறிஸ்தவ முறைப்படி திருமணமான இவர்கள், இந்து மதத்திற்கு மாறியதாலும் தமிழ் கலாச்சாரம் மீது கொண்ட பற்றுதலாலும் தமிழ் முறைப்படி, திருமணம் செய்ய முடிவெடுத்தனர். இதற்காக, தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ள இவர்கள், இன்று (வெள்ளிக்கிழமை) மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் உள்ள தனியார் திருமணம் மண்டபத்தில் தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.