திருச்சி:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்னும் 2 மாதங்களில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், ஜல்லிக்கட்டு காளைகளை வாங்கிட ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில், திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த உடையாபட்டியைச் சேர்ந்த சுப்பாயி என்பவர், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காளை ஒன்றை வாங்கி அதை செவலூர் முனியப்பன் கோவிலுக்கு நேர்ந்து விட்டார். அந்த காளையை வாடிவாசல்களில் கோவில் பெயரிலேயே அவிழ்த்து விடப்பட்டு வந்தது.
அந்த காளை ஜல்லிக்கட்டு களத்தில் வீரர்களை பந்தாடி, தனக்கென தனி முத்திரை பதித்தும் வந்தது. இந்த நிலையில், அந்த காளை இன்று காலை ஏலம் விட்டப்பட்டது.