திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கேத்தாண்டப்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் திடீரென தண்டவாளத்திலிருந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதனைத்தொடர்ந்து ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்தி விட்டு உடனடியாக ஜோலார்பேட்டை ரயில்வே துறையினருக்குத் தகவல் அளித்துள்ளார்.
இந்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜோலார்பேட்டை ரயில்வே பொறியாளர் துறையினர் மற்றும் ரயில்வே காவல்துறையினர் சரக்கு ரயிலின் சக்கரத்தைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.