நீலகிரி : பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தங்களது பொழுதை கழிப்பதற்கு, வார இறுதி நாட்களில் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரிவது வழக்கம். அந்த வகையில், இந்த வார இறுதி நாட்களிலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலமான கேளரா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் முதுமலை வழியாக நீலகிரிக்கு வருகை தந்தனர்.
அப்போது மன்றாடியார் எனும் வனப்பகுதி வழியாக காரில் வந்த சில சுற்றுலா பயணிகள், காரை நிறுத்திவிட்டு வனப்பகுதியில் சுற்றித்திரிந்த மான்கள் கூட்டத்தை வேடிக்கை பார்த்தனர். அப்போது, அவ்வழியாக காரில் வந்த இளைஞர் ஒருவர் காரைவிட்டு இறங்கி அங்கு சுற்றித்திரிந்த மான்கள் கூட்டத்திற்குள்ளே ஓடினார்.
இளைஞர் ஓடி வருவதைப் பார்த்த மான்கள் அச்சத்தில் அங்கும் இங்குமாக சிதறி ஓடின. இதனை அவ்வழியாக காரில் சென்ற மற்றொரு நபர் வீடியோவாக பதிவு செய்து அங்கிருந்த சோதனைச்சாவடி அதிகாரியிடம் காண்பித்தார். மேலும், அந்த வீடியோவை அதிகாரியிடம் பரிமாறிக் கொண்டார்.