அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே வடுகர்பாளையத்தைச் சேர்ந்தவர் மணி (25). இவரது மனைவி சிந்துமதி. இவர் தற்கொலைக்கு முயன்ற நிலையில் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், மணி குடிபோதையில் சென்று மனைவியைப் பார்க்க அனுமதிக்குமாறு காவலாளியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அங்கு காவல் பணியில் இருந்த காவலாளி காலையில் வந்து பார்க்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
குடிபோதையில் நடுரோட்டில் படுத்த வாலிபரின் காட்சி (credits-ETV Bharat Tamil Nadu) இதனால் காவலாளிக்கும், மணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், மருத்துவரிடம் பேசிக் கொள்வதாக கூறிச் சென்ற அவர், ஜெயங்கொண்டம் தா.பழூர் சாலை பிள்ளையார் கோயில் பேருந்து நிறுத்தத்தில் சாலை நடுவே படுத்துக்கொண்டு எழுந்திருக்காமல் குடிபோதையில் தன்னை மறந்து கிடந்துள்ளார்.
மேலும், அவருக்கு அருகாமையில் காலியான விஷ பாட்டில் ஒன்றும் இருந்துள்ளது. இதையடுத்து, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மதிவாணன் சென்று அவரை அப்புறப்படுத்தி, அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து போக்குவரத்து நெரிசலை சீர் செய்தார். குடிபோதையில் வாலிபரின் செயலால் ஜெயங்கொண்டம் தா.பழூர் சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், அரசு தலைமை மருத்துவமனையில் குடி போதையில் ஆம்புலன்ஸ் செல்லும்போது குறுக்கே படுத்துக்கொண்டு வழி விடாமல் தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது போலீசார் அவரைக் கண்டித்து அனுப்பி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கல்லூரி மாணவர்களை போதைக்கு அடிமையாக்க முயற்சி?.. ஈரோட்டில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்! - Ganja Arrest In Erode