தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் நீதிபதி எனக் கூறி ரூ.43 லட்சம் மோசடி செய்ததாக பரபரப்பு புகார்! - Avadi Police Commissioner - AVADI POLICE COMMISSIONER

Avadi Commissioner office Complains: மதுரை நீதிமன்றத்தில் நீதிபதி எனக் கூறி, 43 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்ட பெண்ணை கைது செய்யக் கோரி இளைஞர் ஒருவர் ஆவடி காவல் ஆணையரகத்தில் ஆதாரங்களுடன் புகார் அளித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

a-complaint-was-filed-at-youth-avadi-police-commissioner-that-he-had-cheated-43-lakhs-by-pretending-to-be-a-judge
நீதிபதி என கூறி 43 லட்சம் மோசடி செய்ததாக இளைஞர் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 31, 2024, 9:53 PM IST

சென்னை: ஆவடி அடுத்த திருநின்றவூரைச் சேர்ந்தவர் ராஜேஷ் (38). ஆவடி காவல் ஆணையரகத்தில் நீதிமன்றப் பணிக்கான ஆணை ஒன்றைக் கையில் கொண்டு வந்த ராஜேஷ், தனக்கு வேலை வாங்கி தருவதாக போலி நீதிபதி ஒருவர் மோசடி செய்துவிட்டதாக புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், “கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் ஐடி துறையில் ஓட்டுநராக இருந்த போது, சக ஓட்டுநரான பணியாற்றிய பூவிருந்தவல்லி சுந்தர் நகரைச் சேர்ந்த கணபதி என்பவர் நட்பு கிடைத்தது. பின்னர், தான் ஓட்டுநர் தொழிலை விட்டுவிட்டு சொந்தமாக ஹோட்டல் வைத்து நடத்தி வந்தேன். இந்த நிலையில், கடந்த 6 மாதத்திற்கு முன்பு செல்போனில் தொடர்பு கொண்ட கணபதி, வழக்கறிஞராக இருந்த தனது மனைவி ராதிகா, தற்போது மதுரை நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ளதாகவும், இதனால் அவருக்கு ஆபிஸ் அசிஸ்டெண்ட் தேவை. அரசு வேலை, கை நிறைய பணம் என ஆசை வார்த்தை கூறினார்.

அரசு வேலைக்கு சுமார் 15 லட்சம் வரை செலவாகும் என்றும், முதலில் 2 லட்சம் முன் தொகையாகவும், பின்பு பணி ஆணை வழங்கிய பின்பு மீதித் தொகையைக் கொடுத்தால் போதும் என்று கூறினார். இதனை நம்பி முதல் கட்டமாக 2 லட்சமும், பின்பு அவருக்கு நீதிமன்றத்தில் பணி செய்வதற்கான ஆணை வழங்கியபின் மீதித் தொகையை வழங்கினேன். முதலில் நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் பணிக்கு பயிற்சி தேவை, அதனால் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தனக்குத் தெரிந்த நபரிடம் வேலை செய் என அனுப்பினர். அங்கு இரு இரு மாதம் வேலை செய்த பின், செங்கல்பட்டு, சென்னை உயர் நீதிமன்றம் என மாறி மாறி சம்பளமே இல்லாமல் வேலை செய்துள்ளார். வேலை செய்தற்கு சம்பளம் கேட்டதற்கு, பயிற்சி தான் எடுத்துக் கொண்டு இருக்கிறாய் என பாதி சம்பளம் கொடுத்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் பணி ஆணை வழங்கிய தேதிக்கு வேலையில் நான் சேர வேண்டாமா என கேட்ட போது, மழுப்பலான பதிலே அளித்துள்ளனர். இதனிடையே சிறிய பிரச்னையிலிருந்த எனது பாட்டி சொத்தை அதை நான் முடித்துத் தருகிறேன்.,அது எனக்குத் தெரிந்த நீதிபதியிடம்தான் வரவுள்ளது எனக் கூறி பல லட்சத்தை வாங்கியுள்ளனர். ஒரு கட்டத்தில் ராஜேஷுக்கு சந்தேகம் வர, வேலை மற்றும் வாங்கிய பணம் கேட்டு தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் போலி நீதிபதி ராதிகா, குன்றத்தூர் சோமங்கலம் காவல் நிலையத்தில் ராஜேஷ் உட்பட மூவர் மீது புகார் அளித்துள்ளார். பின்பு, அந்த புகார் பொய் என மூவரையும் காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து, தங்கள் பகுதியில் புகார் அளித்துக் கொள்ளுங்கள் என காவல்துறையினர் கூறியதால், திருநின்றவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் எந்தவொரு நடவடிக்கையும் இல்லாததால், தன்னை மோசடி செய்ததை நிரூபிக்க ராதிகா மற்றும் அவரது கணவர் குறித்து அவரது வழக்கறிஞர் உதவியுடன் ராஜேஷ் விசாரித்துள்ளார்.

அதில் ராதிகா, கணபதி ஆகியோர் குன்றத்தூர் அருகே துரைப்பாக்கம் பகுதியில் வசித்து வருவதாகவும், அவர் வழக்கறிஞராக இருந்து கொண்டு நீதிபதி என மோசடியில் ஈடுபட்டு வருவதும், தனக்கு வழங்கிய பணி ஆணையும் போலி, அதில் சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் கையெழுத்து, அரசு முத்திரை அனைத்தும் போலி, அதேபோல் போலி நீதிபதியுடன் பேசிய உரையாடல், அவருக்கு வங்கி மற்றும் ஜிபே மூலம் அனுப்பப்பட்ட பண விவரம் இதனைச் சேகரித்துள்ளார்.

இதேபோல், கடந்த ஆண்டு நீதிபதி காணவில்லை என அவரது கணவர் கணபதி, மாங்காடு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஆனால் அதனை விசாரித்த காவல்துறையினர், நீதிபதி இல்லை என்பதை அறிந்து, அவரது கணவரைக் கண்டித்து அனுப்பியதோடு, Women missing வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் மோசடி செய்ததற்கான அனைத்து ஆவணங்களும் இருந்த போதும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்டவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், நீதிமன்ற பெயரை வைத்து மோசடியில் ஈடுபட்ட கணபதி அவரது மனைவி ராதிகா ஆகிய இருவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார்.

இதையும் படிங்க:திருவாரூரில் வேளாண் முனைவர் பட்டம் பயிலும் மாணவர் தற்கொலை! - PhD Student Commits Suicide

ABOUT THE AUTHOR

...view details