தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வளர்ப்பு மாட்டைக் குளிப்பாட்டச் சென்ற 14 வயது சிறுவன் நீரில் மூழ்கி பலி! - திருவாரூரில் நேர்ந்த சோகம்! - A boy died in thiruvarur

A boy died in thiruvarur: திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் வளர்ப்பு மாட்டைக் குளிப்பாட்டுவதற்காகச் சென்ற 14 வயது சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

A boy died in thiruvarur
குளத்திற்கு வளர்ப்பு மாட்டைக் குளிப்பாட்டச் சென்ற 14 வயது சிறுவன் நீரில் மூழ்கி பலி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 9, 2024, 8:21 PM IST

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட விசலூர் கீழத் தெருவைச் சேர்ந்த தம்பதியினர் கோபாலகிருஷ்ணன்- பொன்மணி. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். கோபாலகிருஷ்ணன் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார்.

சூர்யா ஆண்டிப்பந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இன்று (மார்ச்.9) பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் உள்ள வளர்ப்பு மாட்டைக் குளிப்பாட்டுவதற்காக வீட்டின் அருகே உள்ள தாமரைக் குளத்திற்கு ஓட்டிச் சென்றுள்ளான்.

இந்த நிலையில் மாடு குளிப்பாட்டச் சென்ற மகனை நீண்ட நேரமாகியும் காணவில்லை என்று தாய் பொன்மணி குளத்திற்கு வந்து பார்த்த பொழுது மாடு மட்டும் தனியாக இருந்துள்ளது. இதனையடுத்து மாட்டை விட்டுவிட்டு வேறு எங்கும் சிறுவன் விளையாடச் சென்று இருக்கலாம் என்கிற கோணத்தில் ஊர் முழுவதும் தேடிப் பார்த்தும் சிறுவன் கிடைக்காத காரணத்தினால் குளத்தில் இறங்கி அப்பகுதி மக்கள் தேடிப் பார்த்தபோது சிறுவன் குளத்தில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து நன்னிலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகத் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வளர்ப்பு மாட்டைக் குளிப்பாட்டுவதற்காகச் சென்ற சிறுவன் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:அஜித்குமாரை நலம் விசாரித்த விஜய்!

ABOUT THE AUTHOR

...view details