காரைக்கால்:காரைக்கால் அடுத்த நிரவி பகுதியில் சிங்காரவேலு என்பவரின் மகன் சந்தோஷ் (13) வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தவர் நேற்று காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர், சிறுவனின் பெற்றோர் தேடிய நிலையில், அவர்களது வீட்டின் அருகே இருக்கும் மற்றொரு வீட்டில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட சிறுவன் கழுத்து அறுபட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட சிறுவனின் தாய் மற்றும் தங்கை அளித்த பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், நிரவி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கொலை செய்யப்பட்டு கிடந்த சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இந்த நிலையில், சிறுவனின் உடல் மீட்கப்பட்ட வீட்டில் வசிக்கும் 17 வயதான மற்றொரு சிறுவனை தனிப்படை போலீசார் கைது செய்து, ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
கொலை செய்த சிறுவனிடம் மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்த சிறுவனின் சகோதரியிடம் கொலை செய்த சிறுவன் தவறாக நடந்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தட்டிக் கேட்ட சிறுவனை வீட்டின் அருகே வசிக்கும் மற்றொரு சிறுவன் கொலை செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:மசாஜ் சென்டரில் திருட்டு.. லாட்ஜில் லாக் செய்த போலீசார் - சென்னையில் நடந்தது என்ன?