தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேரும், சகதியுமாக தண்டவாளத்தில் துண்டாகி கிடந்த உடல்.. வாணியம்பாடியில் 17 வயது சிறுவன் குரூர மரணம் - VANIYAMBADI BOY DEATH

வாணியம்பாடி அருகே ரயில் தண்டவாளத்தில் 17 வயது சிறுவன் உடல் இரு துண்டுகளாகி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவன் நரசிம்மன், சம்பவ இடம்
சிறுவன் நரசிம்மன், சம்பவ இடம் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 5, 2025, 5:00 PM IST

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே ரயில் தண்டவாளத்தில் 17 வயது சிறுவன் உடல் துண்டாகி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், சிறுவனின் உயிரிழப்பில் மர்மம் இருப்பதாக, உடலை எடுக்க விடாமல் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் நரசிம்மன் (17). சிறுவன் பத்தாம் வகுப்பு வரை முடித்துவிட்டு அதே பகுதியில் சில வேலைகளை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், சிறுவன் நரசிம்மன் இன்று (ஜன.5) நெக்குந்தி பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் உடல் இரண்டு துண்டுகளாகி சடலமாக கிடந்துள்ளார்.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிறுவனின் உடலை ரயில்வே தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தி பார்த்தபோது உடல் முழுவதும் காயங்களுடன் சேரும் சகதியுமாக இருந்துள்ளது.

இதையும் படிங்க:44 மணிநேர சோதனை; அமைச்சர் துரைமுருகன் இடங்களில் இருந்து வெளியேறிய அமலாக்கத்துறை!

தொடர்ந்து சிறுவனின் உடலை ஆம்புலன்ஸில் ஏற்ற முயன்ற போது, சிறுவனின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், உடனடியாக இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என, சிறுவனின் உறவினர்கள், உடலை ஆம்புலன்ஸில் கொண்டு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் காவல்துறையினர் பேச்சு வார்த்தைக்கு பிறகு, சிறுவனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, பின்னர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தின் பேரில் சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

மேலும், 17 வயது சிறுவன் ரயில் தண்டவாளத்தில் இரண்டு துண்டுகளாக சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் நெக்குந்தி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details