தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுதந்திர தின விழாஅணிவகுப்பு ஒத்திகை; சென்னையில் இன்று துவக்கம்! - Independence Day Parade rehearsal

Independence Day Parade rehearsal: இந்திய நாட்டின் 78-வது சுதந்திர தினவிழா ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில், இன்று சென்னை கோட்டை கொத்தளத்தில் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை
சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 5, 2024, 6:59 PM IST

சென்னை:சுதந்திர தினவிழாவில் காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறும், அந்த வகையில் இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி இன்று சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெற்றது. முதல் நாள் ஒத்திகை நிகழ்ச்சியில் சுதந்திர தினத்தன்று முதல்வரை காவல்துறை வாகன அணிவகுப்புடன் அழைத்து வருவது போன்ற ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.

சுதந்திர தின விழா அணிவகுப்பு ஒத்திகை (Credits- ETV Bharat Tamil Nadu)

அதனை தொடர்ந்து கமாண்டோ படை, பெண் காவலர்கள் உள்ளிட்ட 7 படைப்பிரிவினர் பங்கேற்ற அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஏற்றுக் கொண்டு தேசிய கொடியை ஏற்றுவது போன்று ஒத்திகை நடைபெற்றது. பின்னர், தகைசார் தமிழர் விருது, ஏபிஜே அப்துல் கலாம் விருது, துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா உள்ளிட்ட விருதுகள் வழங்குவது போன்று ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் இதன் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட ஒத்திகை ஆகஸ்ட் 9 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் அடை மழைதான்.. குடை எடுக்க மறந்துடாதீங்க மக்களே!

ABOUT THE AUTHOR

...view details