தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெலிங்டன் ராணுவ ஆயுதக் கண்காட்சி சிறப்பு தொகுப்பு - NILGIRIS MILITARY EXHIBITION

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெல்லிங்டன் ராணுவ மையத்தில் 77 வது ராணுவ தினம் மற்றும் நவீன ரக ஆயுதக் கண்காட்சி நடைபெற்றது.

ராணுவ கண்காட்சி
ராணுவ கண்காட்சி (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 16, 2025, 12:57 PM IST

நீலகிரி:குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்தில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களுக்கு ஆயுதப் பயிற்சி, மலையேற்ற பயிற்சி, நவீன ரக துப்பாக்கிகளை கையாளும் பயிற்சி போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டு நம் நாட்டின் எல்லைப் பகுதிக்கு பாதுகாப்பிற்காக அனுப்பப்படுகின்றனர்.

அந்த பயிற்சி மையங்களுள் வெலிங்டன் எம்.ஆர்.சி மையமும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15ஆம் தேதி இந்திய ராணுவ தினம் கொண்டாடப்படுகிறது. 1949-ம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி பிரிட்டிஷ் ராணுவ அதிகாரியான ஜெனரல் சர் பிரான்சிஸ் புட்சாரிடமிருந்து இந்திய ராணுவ அதிகாரியான லெப்ட்னன்ட் ஜெனரல் கே.எம். கரியப்பாவிடம் இந்திய ராணுவம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் எம். ஆர். சி. ராணுவ மையத்தில் நேற்று 77வது ஆண்டு ராணுவ தினம் கமாண்டன்ட் கிறிஸ்து தாஸ் தலைமையில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இந்திய வீரர்கள் பயன்படுத்தும் நவீன ரக ஆயுதங்கள் கண்காட்சியில் இடம் பெற்று இருந்தது.

இந்த கண்காட்சியில் போரில் பயன்படுத்தப்படும் நவீன ரக எந்திர துப்பாக்கி ஏகே 203 வைக்கப்பட்டிருந்தன. இந்த துப்பாக்கிகளை இயக்குவது குறித்த செயல் விளக்கத்தை இந்திய ராணுவ வீரர்கள் கண்காட்சிக்கு வந்திருந்த மாணவர்களிடம் விளக்கிக் கூறினார்கள்.

ராணுவ கண்காட்சி (ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க:மியான்மர் ராணுவத்தின் வான்வெளி தாக்குதலில் 40 பேர் பலி!

மேலும் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில் உள்ள தொழிற்சாலையில் ரஷ்யா - இந்தியா கூட்டு தயாரிப்பில் ஏகே 203 ரக துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த துப்பாக்கிகள் துல்லியமாகவும், எடை குறைவாகவும், இலக்கை சரியாக தாக்கும் திறன் கொண்டது.

ஏகே 203 ரக துப்பாக்கிகளின் எடை 3.8 கிலோ எடை கொண்டதாகும். 400 முதல் 800 மீட்டர் வரை குறி வைத்து தாக்க முடியும். இந்த துப்பாக்கியில் இருந்து 700 குண்டுகளை வெளியேற்றலாம். துப்பாக்கியின் நீளம் 705 மில்லி மீட்டர் ஆகும். துப்பாக்கியில் லென்ஸ் பொருத்தப்பட்டு தொலைதூரத்தில் உள்ள இலக்குகளை எளிதாக தாக்க முடியும். மேலும், தற்போது இந்திய ராணுவ வீரர்கள் நம் நாட்டு எல்லைகளிலும் ஏகே 203 ரக துப்பாக்கிகளை பயன்படுத்தி வருகின்றனர்.

வரும் காலங்களில் தற்போது உள்ள காலகட்டத்திற்கு ஏற்றார் போல் ஏகே 203 ரக துப்பாக்கிகள் உள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது உள்ள நவீன ரக எந்திர துப்பாக்கிகள் வரை கண்காட்சியில் இடம்பெற்று இருந்தது. மேலும் கண்காட்சியின் போது ராணுவ வீரர்கள் சாகச நிகழ்ச்சிகள், களரி, கேரளா செண்டை மேளம், சிலம்பம், வாள் சண்டை போன்ற தற்காப்பு கலைகளை செய்து காட்டினார். மேலும் பள்ளிக் குழந்தைகளின் யோகா பயிற்சியும் காண்பிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர். இறுதியில் நிகழ்ச்சியில் பங்கேற்ற ராணுவ வீரர்கள் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details