வேலூர்:வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின் பேரில் கடந்த 2023 மற்றும் 2024ஆம் ஆண்டு வரை மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்சுவது மற்றும் விற்பனை செய்வது தொடர்பாக தீவிர சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையில் சுமார் 3 லட்சத்து 82 ஆயிரத்து 475 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள், சுமார் 64 ஆயிரத்து 482 லிட்டர் கள்ளச்சாராயம், 43 ஆயிரத்து 164 மது பாட்டில்கள், கள்ளச்சாராய ஊரலுக்கு பயன்படுத்தும் வெல்லம் 12 ஆயிரத்து 100 கிலோ, வெள்ளை சர்க்கரை 915 கிலோ, பட்டை சுமார் ஆயிரத்து 200 கிலோ மற்றும் கள் 128 லிட்டர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டு உள்ளன.