திருவாரூர்: மேல பருத்தியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணசாமி. இவர் பெருநிலக்கிழாராக இருந்து விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி கண்ணகி (48). இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இருவரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பருத்தியூரில் உள்ள வீட்டில் நாராயணசாமி மற்றும் அவரது மனைவி கண்ணகி ஆகிய இருவர் மட்டும் வசித்து வந்தனர். கண்ணகி எப்போதும் கழுத்தில் ஏராளமான நகைகளை அணிந்திருப்பது வழக்கம். இந்நிலையில், நேற்று மாலை நாராயணசாமி திருவாரூருக்கு ஒரு வேலையாக சென்றுள்ளார். வேலை முடிந்து பருத்தியூருக்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டில் மனைவி கண்ணகியை காணவில்லை.
இதனால் நாராயணசாமி வீட்டிற்கு பின்புறம் சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு கழுத்து அறுபட்டு ரத்த வெள்ளத்தில் கண்ணகி கொலையாகி கிடந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நாராயணசாமி கூச்சலிட்டு அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளார்.
இதையும் படிங்க:பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணித ஆசிரியர் கைது.. தஞ்சையில் பரபரப்பு!