தேனி:தேனியில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் விடுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர். இந்த நிலையில், விடுதியில் தங்கிப் படிக்கும் போடியைச் சேர்ந்த 10 வயது சிறுவனுக்கு, அந்த விடுதியில் உள்ள 3 சிறுவர்கள் இணைந்து பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
அதனால், மன உளைச்சலுக்கு ஆளான சிறுவன் பள்ளி முடிந்ததும், விடுதிக்குச் செல்லாமல், போடியில் உள்ள தனது வீட்டிற்குச் சென்று, இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் தாய், சிறுவனை அழைத்துக் கொண்டு தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.