தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"19 அரசு பல்கலைக்கழகங்களில் குறித்த நேரத்தில் பட்டமளிப்பு விழாக்கள் நடத்தப்பட்டுள்ளன" ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் - RAJ BHAVAN

தமிழ்நாட்டில் 19 பல்கலைக் கழகங்களில் படித்த 8 லட்சத்து 27 ஆயிரத்து 900 பட்டதாரிகள் பட்டங்களை பெற்றுள்ளனர் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

பட்டமளிப்பு விழா கோப்புப்படம்
பட்டமளிப்பு விழா கோப்புப்படம் (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 3, 2024, 4:27 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் 19 பல்கலைக் கழகங்களில் படித்த 8 லட்சத்து 27 ஆயிரத்து 900 பட்டதாரிகள் பட்டங்களை பெற்றுள்ளனர் என ஆளுநர் ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் அளித்துள்ளார்.

மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்கலைக்கழகங்களில் பட்டங்களை வழங்க பல்கலைக்கழகங்களின் வேந்தரும், தமிழ்நாடு ஆளுநருமான ஆர்.என்.ரவி அனுமதி வழங்க வேண்டுமென உயர் கல்வித்துறை கடிதம் எழுதியது. அதனைத் தொடர்ந்து, அக்டோபர் மாதத்திற்குள் பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடத்துவதற்கு அனுமதிக்கப்படுவதாகவும், அதற்குரிய ஏற்பாடுகளை பல்கலைக்கழகங்கள் செய்ய வேண்டும் எனவும் ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில் பொதிகை தொலைக்காட்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதில் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து அதன் பின்னர் நடைபெற்ற பட்டமளிப்பு விழாக்களை அமைச்சர்கள் புறக்கணித்தனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,"தமிழ்நாடு ஆளுநர் மற்றும் பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என். ரவி, அக்டோபர் 31 ந் தேதிக்குள் அனைத்து பல்கலைக்கழங்களிலும் வருடாந்திர பட்டமளிப்பு விழாவை நடத்தி முடித்திட அனைத்து துணைவேந்தர்களுக்கும் அறிவுறுத்தியிருந்தார்.

இதையும் படிங்க:பொதிகை எக்ஸ்பிரஸ் நேரத்தை மாற்றுக.. தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் தீர்மானம்!

அதன் அடிப்படையில் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி அன்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (கோயம்புத்தூர்) பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பட்டங்களை வழங்கினார். தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் (நாகப்பட்டினம்), சென்னைப் பல்கலைக்கழகம் (சென்னை) ஆகியவற்றின் பட்டமளிப்பு விழாக்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் தலைமை வகித்தார்.

அத்துடன் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் (சென்னை), பெரியார் பல்கலைக்கழகம் (சேலம்), மதுரை காமராசர் பல்கலைக்கழகம் (மதுரை), , மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் (திருநெல்வேலி) உள்ளிட்ட 19 அரசுப் பல்கலைக்கழகங்களின் வருடாந்திர பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களுக்கு பட்டம் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.

தமிழ்நாடு ஆளுநர் மற்றும் வேந்தரால் 7,918 மாணவர்களுக்கு நேரில் (In-Person) பட்டங்களை வழங்கியும், 8,20,072 (இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டங்கள் மற்றும் அறிவியல் முனைவர் பட்டங்கள் உட்பட) மாணவர்களுக்கு பட்டங்களை ஆளில்லா நிலையில் (In-Absentia) வழங்கியும் உள்ளார். அதாவது 19 அரசுப் பல்கலைக்கழகங்களில் மொத்தம் 8,27,990 பட்டதாரிகள் தங்கள் பட்டங்களைப் பெற்றுள்ளனர்.

எஞ்சியுள்ள சென்னை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரைப் பல்கலைக்கழகத்தின் வேண்டுகோளின் பேரிலும், அப்பாட திட்டங்களின் காலுறையைக் கருத்தில் கொண்டும் அதன் பட்டமளிப்பு விழா நவம்பர் 20 ந் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து அரசுப் பல்கலைக்கழகங்களுக்கான பட்டமளிப்பு விழா இனிவரும் ஆண்டுகளில் ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறுவதை உறுதி செய்யுமாறு துணைவேந்தர்களுக்கு, ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார். 19 அரசுப் பல்கலைக்கழகங்களுக்கான பட்டமளிப்பு விழாக்களை குறிப்பிட்ட அக்டோபர் மாதம் இறுதிக்குள் நிகழ்த்தியிருப்பது இதுவே முதல் முறையாகும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details