தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

15 வயது சிறுமிக்கு பாலியல் சீண்டல்.. காதல் ஜோடி போக்சோவில் கைது! - pocso case - POCSO CASE

POCSO CASE: 15 வயது சிறுமிக்கு பாலியல் சீண்டல் அளித்ததாக சென்னையைச் சேர்ந்த சினிமா ஆடை வடிவமைப்பாளர் மற்றும் அவரது காதலனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்டுள்ள நபர்கள்
கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 9, 2024, 2:24 PM IST

சென்னை:சென்னையைச் சேர்ந்த 15 வயது சிறுமி தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் தன்னுடைய நண்பர்கள் உடன் சேர்ந்து விளையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அப்போது இவருக்கும், இளம் பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் அந்த இளம் பெண், சிறுமியிடம் நட்பாகப் பழகி வந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், தன்னுடைய பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு வருமாறு சிறுமியை அழைத்துக் கொண்டு ஒரு அப்பார்ட்மெண்டிற்குச் சென்ற இளம்பென், அவருடைய இரண்டு ஆண் நண்பர்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.

பின்னர் இளம்பெண், சிறுமியை வற்புறுத்தி இனிப்பு ஒன்றைக் கொடுத்ததாகவும், அந்த இனிப்பை சாப்பிட்டவுடன் சிறுமிக்கு மயக்கம் ஏற்பட்டதால் தண்ணீர் கேட்டதாக கூறப்படுகிறது. தண்ணீர் கொடுப்பதாகக் கூறி ஒரு அறைக்குள் சென்ற இளம்பெண், சிறுமி இருந்த அறையை பூட்டிவிட்டு தப்பிச் சென்றதாகவும், பின்னர் இளம்பெண்ணுடன் வந்த இரண்டு ஆண் நண்பர்கள் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி காலையில் எழுந்து இளம்பெண்ணிடம் கேட்டபோது, கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்துள்ளனர். பின்னர், பாதிக்கப்பட்ட சிறுமி இரண்டு நாட்கள் கழித்து நடந்த சம்பவம் தொடர்பாக தனது சகோதரியிடம் தெரிவித்த நிலையில், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக காண்பித்தபோது பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

உடனடியாக சிறுமியின் பெற்றோர் இது குறித்து விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சிறுமியை பிறந்தநாள் நிகழ்ச்சி என ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்றது பெருங்களத்தூரைச் சேர்ந்த பிரதிக்சா அகிரா என்பதும், இவர் சினிமாத் துறையில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வருவதும் தெரிய வந்துள்ளது.

மேலும், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது பிரதிக்சா அகிராவின் காதலரான சோமேஷ் மற்றும் அவரது நண்பர் வில்லியம்ஸ் என்பதும் தெரிய வந்துள்ளது. பிறந்தநாளின் போது அகிராவின் காதலன் சோமேஷிற்கு விருந்தளிக்க சிறுமியை அகிரா அழைத்துச் சென்றிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, செல்போன் எண்ணை வைத்து இளம்பெண் பிரதிக்சா அகிரா மற்றும் வடபழனியைச் சேர்ந்த கல்லூரி மாணவரான சோமேஷ் என்ற சோமசுந்தரம் ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வரும் வில்லியம்ஸ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:“ஓடுற பஸ்ச ஒரே காலால எப்டி நிறுத்துனேன் பாத்தியா..” மதுப்பிரியருக்கு எலும்பு முறிவு.. மயிலாடுதுறையில் நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details