தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் 14 விமானம் ரத்து - flights cancelled today

chennai airport flight delays: சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று ஒரே நாளில் கொல்கத்தா, மும்பை, பெங்களூர் உள்ளிட்ட வெவ்வேறு நகரங்களுக்கு சென்று திரும்பும் 14 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர்.

பறக்கும் விமானம் - கோப்புப்படம்
பறக்கும் விமானம் - கோப்புப்படம் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 8, 2024, 8:07 PM IST

சென்னை:சென்னையிலிருந்து கொல்கத்தா, பெங்களூர், ஹைதராபாத் கவுகாத்தி ஆகிய பெருநகரங்களுக்கு செல்லக்கூடிய நான்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள், மும்பை செல்ல வேண்டிய ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள், சீரடி செல்லக்கூடிய ஸ்பை ஜெட் பயணிகள் விமானம் ஆகிய 7 புறப்பாடு விமானங்கள், அதைப்போல் இந்த பெருநகரங்களில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய ஏழு விமானங்கள் மொத்தம் 14 விமானங்கள் இன்று ஒரே நாளில் ரத்தானதால், சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

விமானங்கள் தாமதம்: அதேபோல் சென்னையில் இருந்து லண்டன் செல்ல வேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் இன்று 6 மணி நேரம் தாமதமாகவும், சிங்கப்பூர் செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 8 மணி நேரம் தாமதமாகவும், அதோடு மும்பை, ஹைதராபாத் விமானங்களும் தாமதமாக புறப்பட்டு சென்றன.

இதைப்போல் சென்னை விமான நிலையத்தில் தொடர்ந்து கடந்த சில தினங்களாக விமானங்கள் ரத்து, இல்லையேல் பல மணி நேரம் தாமதம் போன்றவைகள் காரணமாக, பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

பயணிகள் அவதி: மேலும், விமானங்கள் ரத்து, தாமதம் குறித்து பயணிகளுக்கு முறையான முன்னறிவிப்புகளும் செய்யப்படவில்லை என்று பயணிகள் தரப்பில் கூறப்படுகிறது. அதைப்போல் சென்னை விமான நிலையத்தில் உள்ள, விமானங்கள் வருகை, புறப்பாடு குறித்து அறிவிக்கும் டிஸ்பிளே போர்டுகளிலும் சரியானபடி அறிவிப்புகள் வெளியிடுவது இல்லை என்று பயணிகள் தரப்பில் குறை கூறுகின்றனர்.

இந்த விமானங்கள் ரத்து, தாமதம் ஆகியவற்றுக்கு காரணம், நிர்வாகம் செயல்பாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்று, விமான நிறுவனங்கள் தெரிவித்துவிடுவதாக சொல்கின்றனர்.

இது குறித்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் கடந்த சில தினங்களாக ரத்து செய்யப்படுவதற்கு காரணம், போதிய விமானிகள் பணியில் இல்லாததால், விமானங்களை இயக்க முடியாமல் ரத்து செய்யப்படுகின்றன என்று தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சீரடி விமானம் போதிய பயணிகள் இல்லாமல் ரத்து செய்யப்படுகிறது என்றும் மும்பை விமானங்கள், அங்கு நிலவும் மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்படுகிறது என்றும் விளக்கம் அளிக்கப்படுகிறது.

அதேபோல் சிங்கப்பூர், லண்டன் விமானங்களும், அங்கு நிலவும் மோசமான வானிலை காரணமாக, சென்னைக்கு தாமதமாக வந்துவிட்டு, தாமதமாக புறப்பட்டு செல்கின்றன என்று விமான நிலைய நிர்வாக தரப்பில் கூறுகின்றனர்.

இதையும் படிங்க:வேங்கைவயல் விவகாரத்தில் இதுவரை ஒருவரைகூட கைது செய்யாதது ஏன்? - அரசுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி!

ABOUT THE AUTHOR

...view details