தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை விமான நிலையத்தில் இன்றும் 12 விமான சேவைகள் திடீர் ரத்து.. பயணிகள் கடும் அவதி! - 12 FLIGHT CANCELLED TODAY

சென்னை விமான நிலையத்தில் இன்று (நவ.20) 12 விமானங்களின் சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

விமானம்
விமானம் கோப்புப்படம் (Credits - ETV Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 20, 2024, 12:41 PM IST

சென்னை: சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக அடிக்கடி சில விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. தனியார் விமான நிறுவனங்களின் நிர்வாக காரணங்களுக்காக, ரத்து செய்யப்படுவதாகக் கூறப்படுவதால் தொடர்ந்து பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று ஒரே நாளில் சென்னை விமான நிலையத்தில் புவனேஸ்வர், கொல்கத்தா, பெங்களூர், திருவனந்தபுரம், சிலிகுரி உள்ளிட்ட 6 புறப்பாடு விமானங்களும், அதைப்போல் 6 வருகை விமானங்கள் என மொத்தம் 12 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்துமே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தைச் சேர்ந்த விமானங்கள்.

ரத்து செய்யப்பட்ட விமானங்கள்: சென்னையில் இருந்து புவனேஸ்வருக்கு இன்று காலை 7.45 மணிக்கு செல்ல வேண்டிய விமானம், காலை 8.25 மணி கொல்கத்தா விமானம், காலை 9.40 மணி பெங்களூரு விமானம், காலை 10.10 மணி திருவனந்தபுரம் விமானம், பகல் 12.35 மணி சிலிகுரி விமானம், இரவு 10.45 மணி கொல்கத்தா செல்லும் விமானம் ஆகிய 6 புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதேபோல, சென்னைக்கு வர வேண்டிய காலை 9 மணி பெங்களூரு விமானம், பகல் 12 மணி புவனேஸ்வர் விமானம், பகல் 1.40 மணி திருவனந்தபுரம் விமானம், பகல் 1.45 மணி கொல்கத்தா விமானம், மாலை 6.40 மணி சிலிகுரி விமானம், இரவு 10.05 மணி கொல்கத்தா விமானம் ஆகிய 6 வருகை விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில், இன்று ஒரே நாளில் 12 விமானங்கள் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன. நிர்வாக காரணங்களால் இந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்றும் இதே போல 8 சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. நேற்று ஒரே நாளில் சிங்கப்பூர், இலங்கை, டாக்கா ஆகிய நாடுகளுக்கு செல்லும் புறப்பாடு மற்றும் வருகை விமானங்கள் என மொத்தம் 8 சர்வதேச விமானங்கள் திடீரென ரத்து செயப்பட்டன. இதுபோல, தனியார் விமான சேவை நிறுவனங்கள் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென விமானங்களை ரத்து செய்வதால் கடும் அவதிக்குள்ளாவதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details