சென்னை: தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படித்த 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இன்று (மார்ச் 4) பொதுத்தேர்வு தொடங்கியது. தேர்வி எழுதும் மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கியும், வாழ்த்துக்களை தெரிவித்தும் ஆசிரியர்கள் வகுப்பறைக்கு அனுப்பி வைத்தனர்.
தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை:பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 7 ஆயிரத்து 534 மேல்நிலைப் பள்ளிகளில் படித்த, 3 லட்சத்து 89 ஆயிரத்து736 மாணவர்களும், 4 லட்சத்து 30 ஆயிரத்து 741 மாணவிகள் என மொத்தம் 8 லட்சத்து 20 ஆயிரத்து 207 மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேர்வு மையங்களின் எண்ணிக்கை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 3 ஆயிரத்து 302 மையங்களில் இன்று தெரு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வினை கண்காணிக்கும் பணியில், அரை கண்காணிப்பாளர்களாக 46 ஆயிரத்து 700 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், பறக்கும் படை மற்றும் நிலையான பறக்கும் படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சிறைவாசிகளில் வசதிக்காக சிறைகளிலும் தேர் மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வுகள் நடைபெற்று வருகிறது.
சென்னையில் தேர்வு:சென்னையில் உள்ள 591 பள்ளிகளில் படிக்கும் 65 ஆயிரத்து 852 மாணவ, மாணவிகள், 240 மையங்களில் இன்று தேர்வினை எழுதுகின்றனர். தேர்வினை கண்காணிக்கும் பணியில், முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், அறைக் கண்காணிப்பாளர்கள், பறக்கும் படையினர் என மொத்தம் 4465 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.