ஐதராபாத்: 18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக 2025 ஐபிஎல் மெகா ஏலம் நாளை (நவ.24) மற்றும் நாளை மறுநாள் (நவ.25) சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஐபிஎல் ஏலம் எத்தனை மணிக்கு தொடங்கும், எந்த தொலைக்காட்சி மற்றும் செயலி மூலம் ஏலத்தை பார்க்க முடியும் என்பது குறித்து இந்த செய்தியில் காணலாம்.
தேதி மற்றும் நேரம்:
நவம்பர் 24 (ஞாயிறு) மற்றும் நவம்பர் 25 (திங்கள்) ஆகிய இரண்டு நாட்களில் 2025 ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு ஏலம் துவங்கி நடைபெறும்.
நேரலை ஒளிபரப்பு:
2025 ஐபிஎல் மெகா ஏலம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழும தொலைக்காட்சி சேனல்களில் நேரலையில் ஒளிபரப்பாகும்.
எந்த செயலி மூலம் காணலாம்:
2025 ஐபிஎல் மெகா ஏலத்தை ஜியோ சினிமா மொபைல் செயலி மற்றும் இணையதளத்தில் இலவசமாக காணலாம்.
எத்தனை வீரர்கள் முன்பதிவு:
மொத்தம் இரண்டு நாட்கள் நடைபெற உள்ள மெகா ஏலத்தில் கலந்து கொள்ள ஆயிரத்து 574 வீரர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இதில் ஆயிரத்து 165 இந்திய வீரர்களும், 409 வெளிநாட்டு வீரர்களும் அடங்குவர். மொத்த வீரர்களின் பட்டியலில் வெறும் 574 பேர்களை மட்டுமே பிசிசிஐ கத்தரிப்பு செய்து தேர்வு செய்து உள்ளது.
366 இந்திய வீரர்கள், 208 வெளிநாட்டு வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் 48 வீரர்கள் அன்கேப்டு வீரர்களும் 193 வெளிநாட்டு கேப்டு வீரர்களும் அடங்குவர். ஒவ்வொரு அணியும் மொத்தம் 25 வீரர்களை அணியில் வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகின்றன. 40க்கும் மேற்பட்ட வீரர்கள் ஏற்கனவே தக்கவைக்கப்பட்டு உள்ள நிலையில், இன்னும் 204 வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
ஆதிக்கம் செலுத்தும் வீரர்கள்:
இதனால் ஏலத்தில் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிஷப் பன்ட், ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல். ராகுல், அர்ஷ்தீப் சிங் உள்ளிட்ட வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் போக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இவர்களுடன் 13 வயதே நிரம்பிய வைபவ் சூர்யவன்ஷியும் ஏலத்தில் கலந்து கொள்ள உள்ளார். இவர் அண்மையில் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய உலக கோப்பை அணியில் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.