ஐதராபாத்:கார்கள் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. குறிபிட்ட வயது வரை மட்டுமே பைக் மீது நாம் அதிக ஆர்வம் கொண்டு இருக்கிறோம். அதன்பின் அனைவரின் எதிர்பார்ப்பும் கார் மீது திரும்பிவிடுகிறது. கார் என்பது ஆடம்பரத்தின் அடையாளமாகவும் அத்தியாவசயத்தின் அவசியமாகவும் தற்போது மாறி வருகிறது.
நடுத்தர குடும்பத்தினர் முதல் அனைத்து தரப்பு மக்களும் தங்கள் வாழ்நாளில் எப்படியாவது ஒரு கார் வாங்கிவிட வேண்டும் என்பதை ஆசையாக கொண்டு இருக்கின்றனர். கார் என்பது ஒற்றை வார்த்தை தான், ஆனால் அது ஆளுக்கு ஏற்றார்போல் பல்வேறு விதங்களாக மாறுகின்றன. சிலருக்கு சொகுசு கார்கள் மீது மோகம் அதிகம் இருக்கும்.
பிஎம்டபிள்யு, ஆடி, பென்ஸ், ஜாகுவார் உள்ளிட்ட பிரபல சொகுசு கார்களை வாங்க பலரும் விரும்புவர். அதேநேரம் ஒரு சிலர் லம்போர்கினி உள்ளிட்ட ஸ்போர்ட்ஸ் கார்கள் மீது அளவுக்கு அதிகமான மோகம் கொண்டு இருப்பர். அப்படி கிரிக்கெட் வீரர்கள் வைத்து இருக்கும் சொகுசு கார்களின் பட்டியல் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
கேப்டன் தோனியிடம் இல்லாத கார்களா?:
முதலாவதாக அனைவருக்கும் தெரிந்த முனனள் கேப்டன் தோனியிடம் உள்ள கார்களை பார்க்கலாம். எம்எஸ் தோனி Mercedes-AMG G63 வகை விலையுயர்ந்த சொகுசு காரை வைத்து உள்ளார். இந்த காரன் மதிப்பு 2 கோடியே 43 லட்ச ரூபாய். 4.0 லிட்டர் வி8 இரட்டை டர்போ என்ஜின் பொருத்திய இந்த கார் ஆஃப் மற்றும் ஆன் ரோடு டிராவலுக்கு உகந்தது.
தோனியின் விலையுயர்ந்த வாகனங்களின் பட்டியலில் இந்த காருக்கு என மதிப்பு உண்டு. அதன்பின் குறிப்பிட்டு கூறும் வகையில், Jeep Grand Cherokee SRT வைத்துள்ளார் தோனி. 6.2 லிட்டர் ஹெமி வி8 என்ஜின் பொருத்திய கார் 707 குதிரைத் திறன் கொண்டது. ஆஃப் ரோடுகளில் இந்த காரில் பயணிக்கும் போது சும்மா கப்பலில் செல்வது போல் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்த ஜீப்பின் விலை இந்திய மதிப்பில் 1 கோடியே 7 லட்ச ரூபாய் வரை இருக்கும். இது தவிர தீவிர பைக் பிரியரான தோனி Confederate Hellcat X132, Harley Davidson Fatboy, Kawasaki Ninja ZX14R, Kawasaki Ninja H2, Ducati 1098 உள்ளிட்ட பல்வேறு ஆடம்பர பைக்குகளையும் வைத்து உள்ளார்.
ஹர்பஜன் சிங்:அவரைத் தொடர்ந்து முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், Mercedes GLS 350 கார் வைத்து உள்ளார், இதன் மதிப்பு 85 லட்ச ரூபாயாகும். அதைத் தொடர்ந்து 88 லட்ச ரூபாய் மதிப்பிலான BMW X6 மற்றும் 1 கோடியே 11 லட்ச ரூபாய் மதிப்பிலான Hummer H2 கார்களையும் வைத்து உள்ளார்.
சஞ்சு சாம்சன்:ராஜஸ்தான் ராயல்ஸ் அனியின் கேப்டன் சஞ்சு சாம்சன், Mercedes benz C Class 60 லட்ச ரூபாய் காரை சொந்தமாக வைத்துள்ளார். அது தவிர, 64 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான BMW 5 Series கார், 66 லட்ச ரூபாய் மதிப்பிலான Audi A6 மற்றும் ஒரு கோடியே 80 லட்ச ரூபாய் மதிப்பிலான Range rover Sport கார்களையும் வைத்துள்ளார்.
Dwayne Bravo:வெஸ்ட் இண்டீஸ் நட்சத்திர வீரர் டுவெய்ன் பிராவோ 75 லட்ச ரூபாய் மதிப்பிலான Mercedes Benz, 80 லட்ச ரூபாய் மதிப்பிலான Ford Mustang மற்றும் 90 லட்ச ரூபாய் மதிப்பிலான Raqnge Rover கார்களை வைத்துள்ளார். கடைசியாக இந்திய வீரர் அஜிங்கய ரஹானே 70 லட்ச ரூபாய் மதிப்பிலான Audi Q5, 75 லட்ச ரூபாய் மதிப்பிலான BMW 6 Series GT மற்றும் 3 கோடியே 30 லட்ச ரூபாய் மதிப்பிலான Mercedes Maybach GLS கார்களை வைத்துள்ளார்.
இதையும் படிங்க:"நான் ஏன் துலிப் கோப்பைக்கு தேர்வாகவில்லை?"- மனம் திறந்த ரிங்கு சிங்! - Rinku Singh On Duleep Trophy 2024