பிரான்ஸ்:பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தம் 76 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ரித்திகா ஹூடா கால் இறுதிக்கு தகுதி பெற்றார். கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை ரித்திகா ஹூடா, ஹங்கேரியின் பெர்னாடெட் நாகியை எதிர்கொண்டார். அபார ஆட்டத்தின் மூலம் ஹங்கேரி வீராங்கனையை ரித்தியா ஹூடா நிலை குலையச் செய்தார்.
போட்டியின் இறுதியில் இந்திய வீராங்கனை ரித்திகா ஹூடா 12-க்கு 2 என்ற புள்ளிகள் கணக்கில் ஹங்கேரியின் பெர்னாடெட் நாகியை வீழத்தினார். இந்த வெற்றியின் மூலம் ரித்திகா ஹூடா கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார். கால் இறுதியில் கிர்கிஸ்தான் வீராங்கனை ஐபெரி மெடெட் கைசியை இந்திய வீராங்கனை ரித்திகா ஹூடா எதிர்கொள்கிறார்.
கால் இறுதியில் அவர் வெற்றி பெறும் பட்சத்தில் மகளிர் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் உறுதியாகும். மேலும், நாளை (ஆக.11) நடைபெறும் கடைசி நாள் ஒலிம்பிக் போட்டிகளிலும் இந்திய அணி கலந்து கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் மற்றொரு இந்திய மல்யுத்த வீராங்கனை வினே போகத் வெள்ளி பதக்கம் கோரி தாக்கல் செய்த மனுவில் சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றம் இன்று இரவுக்குள் தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வினேஷ் போகத்துக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் பட்சத்தில் இந்தியாவுக்கு மகளிர் மல்யுத்தம் விளையாட்டு பிரிவில் ஒரு வெள்ளிப் பதக்கம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:10 மணி நேரத்தில் 4 கிலே எடை குறைப்பு.. வினேஷ் போகத்தால் முடியாதது அமனால் முடிந்தது எப்படி? - Paris Olympics 2024