ஐதராபாத்: இந்திய கிரிக்கெட் அணியில் சச்சின் டெண்டுல்கர் விட்டுச் சென்ற பேட்டிங் பாரம்பரியத்தை அடுத்து முன்னெடுத்து வந்தவராக இருந்த வருகிறார் விராட் கோலி. விராட் கோலி டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.
இருந்தாலும் கடந்த சில காலங்களாக ரன் மெஷினாக இருந்து வந்த விராட் கோலி பின்னர் ரன் குவிக்க தடுமாறி வருவதோடு மட்டுமே இல்லாமல் பல நேரங்களில் அவசரகதியில் விக்கெட்டுகளையும் இழந்து ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறார். ஆனாலும், மீண்டும் பார்முக்கு திரும்புவார் என்று அவரது ரசிகர்கள் அதே நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த மாத இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட விராட் கோலி தயாராகி வருகிறார். தற்போது 36 வயதை எட்டி இருக்கும் விராட் கோலி கிரிக்கெட்டை தாண்டி தொடர்ந்து தன்னுடைய மனைவி, குழந்தைகள் என குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகி அவ்வப்போது அவர்களுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.