சென்னை:இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பிரசித்தி பெற்றது ரஞ்சி கோப்பை கிரிக்கெட். திறமையான கிரிக்கெட் வீரர்களை அடையாளம் கான இந்த போட்டி மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது. தற்போது 89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றன.
இதில் தமிழ்நாடு, கேரளா, கோவா, கர்நாடகா, மாகராஷ்டிரா உள்ளிட்ட 32 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த அணிகள் குருப் A,B,C,D என 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகளில் விளையாடி வருகின்றன. இந்த நிலையில் சி பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு அணி - கர்நாடக அணியை நாளை மறுநாள் (பிப். 9) எதிர்கொள்கிறது.
இதுவரை இவ்விரு அணிகளும் விளையாடியுள்ள 5 போட்டிகளில் 3ல் வெற்றி 2ல் தோல்வி கண்டு குருப் சி பிரிவில் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளது. ரன் ரேட் அடிப்படையில் தமிழ்நாடு அணி முதல் இடத்தில் உள்ளது. இந்த போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் பிப். 9ஆம் தேதி காலை நடைபெறவுள்ளது.
இதில் உடல்நிலை பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த கர்நாடக கேப்டன் மயங்க் அகர்வால் மீண்டும் களமிறங்கவுள்ளார். இந்நிலையில் தமிழ்நாடு, கர்நாடக அணிகள் மோதும் ரஞ்சி கோப்பை போட்டியை ரசிகர் இலவசமாக அமர்ந்து பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளதாவது "சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் தமிழ்நாடு, கர்நாடக டெஸ்ட் போட்டியை ரசிகர்கள் இலவசமாக பார்க்கலாம்.