தமிழ்நாடு

tamil nadu

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடர் துவக்கம்: ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தி கோவா அணி அபார வெற்றி! - Ultimate Table Tennis Series

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 23, 2024, 7:47 AM IST

Ultimate Table Tennis 2024: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடர் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் தொடங்கிய நிலையில், துவக்க போட்டியில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியை வீழ்த்தி கோவா சேலஞ்சர்ஸ் அணி வெற்றி பெற்றது.

டேபிள் டென்னிஸ் வீரர்களுடன் அமைச்சர் உதயநிதி
டேபிள் டென்னிஸ் வீரர்களுடன் அமைச்சர் உதயநிதி (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடரின் 5-வது சீசன் போட்டிகள் சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நேற்று தொடங்கியது. செப்டம்பர் 7ம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியினை தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து, டேபிள் டென்னிஸ் அணிகளின் கேப்டன்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இந்த தொடரில், அகமதாபாத் எஸ்ஜி பைபர்ஸ், ஜெய்ப்பூர் பாட்ரியாட்ஸ் ஆகிய இரு அணிகள் புதிதாக களமிறங்கியுள்ளன. இவற்றுடன் நடப்பு சாம்பியனான கோவா சேலஞ்சர்ஸ், முன்னாள் சாம்பியனான சென்னை லயன்ஸ், தபாங் டெல்லி டிடிசி, யு மும்பா டிடி, புனேரி பல்தான், பிபிஜி பெங்களூரு ஸ்மாஷர்ஸ் என மொத்தம் 8 அணிகள் களம் காண்கின்றன.

8 அணிகளும் 4 இருபிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒரு அணி தனது பிரிவில் இடம்பெற்றுள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை பலப்பரீட்சை நடத்தும். அந்த வகையில் ஒவ்வொரு அணியும் 5 மோதலில் விளையாடும். லீக் சுற்றில் மொத்தம் 20 மோதல்கள் இடம்பெறும். இந்த தொடரில், ஒவ்வொரு போட்டியிலும் 2 ஆண்கள் ஒற்றையர் ஆட்டங்கள், 2 மகளிர் ஒற்றையர் ஆட்டங்கள் மற்றும் 1 கலப்பு இரட்டையர் ஆட்டம் என மொத்தம் 5 ஆட்டங்கள் நடத்தப்படும்.

இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். அதன்படி நேற்று நடைபெற்ற முதல் லீக் போட்டியில் கோவா சேலஞ்சர்ஸ், ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதியது. இதில் ஒற்றையர் பிரிவில் கோவா வீரர் ஹர்மீட் தேசாய் ஜெய்ப்பூர் வீரர் Cho seung-min-விடம் 1-2 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். மகளிர் ஒற்றையர் பிரிவில் கோவா வீரங்கனை Yangzi Liu, ஜெய்ப்பூர் வீரங்கனை சுதாஷினியை 3-0 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார்.

கலப்பு இரட்டையர் பிரிவில் கோவா வீரர்கள் ஹர்மீத் மற்றும் liu இணை ஜெய்ப்பூர் வீரர்கள் ரோனிட், சுதாஷினி இணையை 2-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தினர். 2வது ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் கோவா வீரர் மிஹாய் ஜெய்ப்பூர் வீரர் ரோனிட்டை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தினார். 2-வது மகளிர் ஒற்றையர் பிரிவில் யாஷஸ்வினி ஜெய்ப்பூர் வீராங்கனை நித்யஸ்ரீ-யிடம் 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். 5 போட்டிகள் முடிவில் 9-6 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியை வீழ்த்தி கோவா சேலஞ்சர்ஸ் அணி வெற்றி பெற்றது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:12 மணி நேரத்தில் டைமண்ட் பட்டன்! K-pop சிங்கரை பின்னுக்குத் தள்ளி ரொனால்டோ வரலாறு! - Ronaldo Got Diamond Button

ABOUT THE AUTHOR

...view details