ETV Bharat / sports

டாஸ் வென்று வங்கதேசம் பந்துவீச்சு தேர்வு; பிளேயிங் 11-ல் இடம்பெற்றுள்ள வீரர்கள் யார்? மழை குறுக்கிடுமா? - IND Vs Ban Test

author img

By PTI

Published : 13 hours ago

இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்நிலையில், பிளேயிங் லெவனில் இடம் பெற்றுள்ள வீரர்கள் யார்? மைதானத்தில் மழை குறுக்கிடுமா என்பது குறித்து பார்ப்போம்.

ரோகித் சர்மா கோப்புப்படம்
ரோகித் சர்மா கோப்புப்படம் (Credit - ani)

சென்னை: இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.

இரு அணி வீரர்களில் விவரம்:

இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், விராட் கோலி, கே.எல். ராகுல், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா, ஆகாஷ் தீப், முகமது சிராஜ்

வங்கதேச அணி: ஷத்மான் இஸ்லாம், ஜாகிர் ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹீம், ஷாகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ் (விக்கெட் கீப்பர்), மெஹிதி ஹசன் மிராஸ், தஸ்கின் அகமது, ஹசன் மஹ்மூத், நஹித் ராணா

பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய உற்சாகத்தில் இந்தியா வந்து இருக்கும் வங்கதேச அணி 2 டெஸ்ட் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடவுள்ளது. அந்த அணியில் நஹித் ரானா, மெஹிதி ஹசன் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். அதேபோல், சீனியர் வீரரான ஷகிப் அல் ஹசன், நஜ்முல் ஆகியோர் வங்கதேச அணிக்கு வலுசேர்க்கின்றனர்.

இந்திய அணியைப் பொறுத்தவரையில் 2 சுழற்பந்து வீச்சாளர்கள், 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கியுள்ளது. குல்தீப் யாதவ் அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆகாஷ் தீப் அணியில் இடம் பெற்றுள்ளார்.

மழை குறுக்கிடுமா? தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, நாகை, கன்னியாகுமரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ஒலிம்பிக் போட்டிகளில் செயல்திறன் குறைந்து வருகிறதா? தங்கவேல் மாரியப்பன் நச் பதில்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.