சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டு டெஸ்ட் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது. முதல் டெஸ்ட் தொடர் நாளை (செப் 19) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க இருக்கிறது. இரண்டாவது டெஸ்ட் தொடர் வரும் செப் 27ம் தேதி கான்பூரில் நடைபெறுகிறது. கடந்த இரண்டு நாட்களாக இரு அணியினா் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தியா வருவதற்கு முன் பாகிஸ்தானுடன் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என வங்கதேசம் அபார வெற்றி பெற்றது குறிப்பிடதக்கது. இன்று இரு நாட்டு வீரர்களும் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபடுவதாக இருந்தது. ஆனால் மைதானத்தில் டெஸ்ட் போட்டிற்கான ஆயத்த பணி நடைப்பெறுவதால் இன்று பயிற்சி ஆட்டம் நடைபெறவில்லை.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் "நாங்கள் யாருக்கும் பயப்பட மாட்டோம். ஆனால் மற்றவர்களின் திறமையை மதிப்போம். களத்தில் இரண்டு அணிகளுமே சிறந்த அணிகள் தான். யார் வியூகங்களை சிறப்பாக கட்டமைக்கிறார்களோ அவர்கள் தான் வெற்றி பெறுவார்கள்.
Gearing up for the #INDvBAN Test series opener and an action-packed home season starting tomorrow 😎#TeamIndia fans, are you ready ❓@IDFCFIRSTBank pic.twitter.com/siCh0SwYgm
— BCCI (@BCCI) September 18, 2024
இதையும் படிங்க: IND VS BAN; முதல் டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை துவக்கம் - டிக்கெட்டுகள் விலை என்ன? - IND VS BAN 1st test series 2024
அஸ்வின், குல்தீப் இருவரும் முதல் நாளில் இருந்து ஐந்தாவது நாள் வரை சிறப்பாக விளையாடக் கூடியவர்கள். இந்தியாவில் இருக்கக்கூடிய மைதானங்களில் இருவரும் ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்கள். இந்த டெஸ்ட் போட்டியில் இவர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாக அமையும். வீரர்களின் டிரெஸ்ஸிங் ரூமில் மூத்த வீரர்கள், இளைய வீரர்கள் என அனைவரிடமும் சுமூகமான உறவில் தான் இருக்கிறேன். இது அணியின் வெற்றிக்கு முக்கியமானது.
எப்பவும் பேட்ஸ்மேன்களை பற்றியே கேள்வி கேட்கப்படும், பந்துவீச்சாளர்களை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது மகிழ்ச்சியே. பும்ரா, சிராஜ், ஷமி, அஸ்வின், ஜடேஜா என அனைவரும் பந்து வீச்சாளர்களை பற்றி பேச வைத்துள்ளார்கள். பும்ரா நல்ல ஃபார்மில் உள்ளார். டி20, ஒருநாள் போட்டிகளில் சாதித்துள்ளார். அவர் அணியில் இருப்பது கூடுதல் பலம்.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளில் 2 அல்லது மூன்று நாட்களுக்குள் டெஸ்ட் போட்டி முடிந்தால் வேகப்பந்து வீச்சாளர்களை பற்றி விமர்சனம் செய்வதில்லை. ஆனால் இந்தியாவில் 2 அல்லது மூன்று நாட்களுக்குள் முடிந்தால் சுழற்பந்து வீச்சாளர்களை விமர்சிக்கிறோம், மைதானத்தை விமர்சிக்கிறோம், இது தவறான அனுகுமுறை" என தெரிவித்தார்.