பாராலிம்பிக் நாயகன் மாரியப்பன் தங்கவேலுவை மேளதாளத்துடன் வரவேற்ற சொந்த மண்! - Paralympics medalist Mariyappan - PARALYMPICS MEDALIST MARIYAPPAN
Paralympics medalist Mariyappan: பாரீஸ் பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு சொந்த ஊரான சேலத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


Published : Sep 19, 2024, 10:44 PM IST
சேலம்: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாராலிம்பிக் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில் உயரம் தாண்டுதலில் இந்தியாவில் இருந்த கலந்து கொண்டவர் மாரியப்பன். இவர் மூன்றாவது முறையாக பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். இவர் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். இந்நிலையில் இன்று சொந்த ஊர் திரும்பிய மாரியப்பனுக்கு சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி பகுதியில் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்தி வரவேற்றார்.
இதனைத்தொடர்ந்து மேளதாளம் முழங்க பட்டாசு வெடித்து ஊர்மக்கள் அவரை தோளில் சுமந்து மலர்தூவி உற்சாகமான வரவேற்பளித்தனர். இதனையடுத்து தீவட்டிப்பட்டி முதல் மாரியப்பனின் கிராமமான பெரிய வடகம்பட்டி வரை திறந்துவெளி வாகனத்தில் சென்ற மாரியப்பனுக்கு ஊர்மக்கள் கையசைத்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பாராலிம்பிக் பதக்க நாயகன் மாரியப்பன் தங்கவேலுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு
அண்மையில் நடந்து முடிந்த பாரீஸ் பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டியில் 1.85 மீட்டர் தாண்டி வெண்கல பதக்கம் வென்ற மாரியப்பன் அடுத்தடுத்த போட்டிகளில் தங்கப்பதக்கம் வெல்வதே இலக்கு என்றும்; உடல்நிலை மற்றும் தட்பவெப்பநிலை காரணமாக இந்த முறை தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்ததாகவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.