ETV Bharat / state

உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக விடாமல் தடுப்பது எது? முதல்வர் ஸ்டாலினுக்கு உள்ள தயக்கம் என்ன? - Udhayanidhi Stalin Deputy CM - UDHAYANIDHI STALIN DEPUTY CM

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக விடாமல் தடுப்பது எது? இதில் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு உள்ள தயக்கம் என்ன? என்பது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Photo Credits -Ministers X page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 19, 2024, 9:57 PM IST

சென்னை: திமுக இளைஞரணிச் செயலாளர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க வேண்டும் என்ற குரல் சமீப நாட்களாக திமுக நிர்வாகிகள் மத்தியில் ஓங்கி ஒலித்து வருகிறது. திமுகவைச் சேர்ந்த பல அமைச்சர்களும் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என விருப்பம் தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுநாள்வரை வெளியாகவில்லை.

உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக விடாமல் தடுப்பது எது? இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு உள்ள தயக்கம் என்ன? எதிர்கட்சியினரின் விமர்சனங்கள் என்ன? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை மூத்த பத்திரிகையாளர் ஷபீரிடம் ஈடிவி பாரத் முன்வைத்தது.

இதற்கு பதில் அளித்த அவர், “திமுகவை உதயநிதி ஸ்டாலின் தான் அடுத்து வழிநடத்த போகிறார் என்பதை கட்சி தெளிவுப்படுத்திவிட்டது. உதயநிதி ஸ்டாலின் தற்போது அமைச்சராக உள்ளார், சிறப்பு திட்டங்களையும் கவனித்து வருகிறார். அவர் தயாராக வேண்டும் என்பதற்காக தான் சட்டமன்ற உறுப்பினரான இரண்டு வருடங்களில் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார்.

இதையும் படிங்க: துணை முதல்வர் டூ விஜய் அரசியல்.. இரண்டுக்கும் பளிச்சுனு பதில் சொன்ன உதயநிதி!

முதலமைச்சருக்கு கிடைக்காத வாய்ப்பு உதயநிதிக்கு?: முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினரான உடனேயே அமைச்சராகவில்லை. முதலமைச்சருக்கு கிடைக்காத வாய்ப்பு உதயநிதிக்கு மிகவும் எளிமையாக, வேகமாக கிடைக்கவுள்ளது. உதயநிதி துணை முதலமைச்சராக அறிவக்கப்படவில்லை என்றாலும் அவர் முக்கிய அமைச்சராக உள்ளார். உதயநிதியை துணை முதமைச்சராக்க வேண்டும் என்பது திமுகவினரின் விருப்பமாக உள்ளது.

எதிர்வரும் விமர்சனங்கள்: உதயநிதியை துணை முதலமைச்சரானால், அவர் விமர்சனமாக வந்துவிடக்கூடாது என திமுகவினர் நினைக்கின்றனர். அப்பா முதல் முறையாக முதலமைச்சராகி மகனை துணை முதலமைச்சராக்கியுள்ளார். இது தான் திமுக செய்த சாதனை என அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் விமர்சனம் செய்வார்கள் என்பதாலும், எதிர்கட்சிகளுக்கு ஒரு விஷயத்தை பேசும்பொருளாக கொடுக்க கூடாது என்பதிலும் திமுகவினர் தெளிவாக உள்ளனர்.

கட்சிக்குள் கருத்து வேறுபாடு: அமைச்சர்கள் பலர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டுமென விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால், கட்சிக்குள் இருக்கும் மூத்த அமைச்சர்கள் துணை முதலமைச்சர் விவகாரத்தில் விரைவாக முடிவு எடுக்கப்படுகிறதோ என்ற கருத்தும் இருக்கிறது.முதல்வரின் செயல்பாடுகள், சாதனைகள் தான் தேர்தலை தீர்மானிக்கும். உதயநிதியை துணை முதலமைச்சர் ஆக்குவது, ஆக்காமல் இருப்பதாலோ அவை தேர்தலை தீர்மானிக்க போவதில்லை.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து: முதலமைச்சர் மு.க ஸ்டாலினை முன்னிலைப்படுத்தி தான் அடுத்த தேர்லை சந்திக்க போகிறார்கள்.அதனால் துணை முதலமைச்சர் பதவி இப்போது வேண்டாம், விமர்சனங்கள் உருவாகிவிடும் என சிந்தித்து வருகிறார்கள். துணை முதலமைச்சர் குறித்து கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள் பேசிகொண்டே இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். ஆனால், முதலமைச்சரை பொறுத்தவரையில் உதயநிதிக்கு ஒரு பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது, அதை சரிவர செய்யட்டும் பின்னர் பார்க்கலாம் என்பதே நிலைப்பாடாக உள்ளது.

இதையும் படிங்க: உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியா? - முதல்வர் ஸ்டாலின் கொடுத்த 'நச்' பதில்!

தவெக தலைவர் விஜய் பெரியார் திடலுக்கு வந்தது ஒரு பெரிய பேச்சுபொருளாக மாறி இருந்த சூழ்நிலையில்,உதயநிதி துணை முதலமைச்சர் பொறுப்பேற்பது குறித்தும் ஒரு பேச்சு பொருளாக இருக்கட்டும் என அவ்விவகாரம் மீண்டும் வந்தது.

முதலமைச்சர் முடிவு: உதயநிதி துணை முதலமைச்சர் ஆவாரா? என்ற கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்திருக்கிறதே தவிர இன்னும் பழுக்கவில்லை” என கூறியிருந்தார். முடிவு என்பது முதலமைச்சர் கையில் உள்ளது. தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் உதயநிதியை துணை முதலைச்சரானால் மக்கள் மத்தியில் அந்தஸ்து உயரும் என கட்சியினர் சிலர் நினைக்கின்றனர். துணை முதலமைச்சர் என்பது முதலமைச்சர் முடிவு. அதனால் ஏற்படும் சாதக, பாதகங்கள் எல்லாம் கட்சியையும், முதலமைச்சரையும் சாரும்.

எதிர்கட்சிகளின் விமர்சனங்கள்: துணை முதலமைச்சர் விவகாரத்தை முதலமைச்சர் ஏன் மிகவும் அவசரமாக எடுக்க வேண்டாம்? என சிந்திக்கின்றார் என்றால், அவை எதிர் பிரச்சாரமாக மாறிவிடக்கூடாது என நினைக்கின்றார். எதிர்கட்சியினர் தற்போது பேசுவதற்கு எந்தவித பேச்சுப்பொருளும் இல்லாமல் இருக்கிறது.எதிர்கட்சியினால் எதிர்கட்சி அரசியலை செய்ய முடியவில்லை. இந்த சூழ்நிலையிலே ஏன் அவர்களுக்கு ஒரு பேச்சுப்பொருளை தர வேண்டும் என முதலமைச்சர் நினைக்கின்றார்.

உதயநிதி துணை முதலமைச்சரானால் குடும்ப ஆட்சி நடத்துகிறார்கள், தன்னுடைய மகனுக்கு முன்னுரிமை கொடுத்துவிட்டார், கட்சியில் வேறு யாரும் இல்லையா? என்ற கேள்வியை எதிர்கட்சியினர் கேட்பார்கள். உதயநிதியை துணை முதலமைச்சராவதற்கு நேரமும், காலமும் தான் முடிவு செய்யும்.அமைச்சரவை மாற்றம் இருக்கும் போது உதயநிதி துணை முதல்வராக வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: "துணை முதலமைச்சர் பதவி யாருக்குத் தான் வேண்டாம்"- அமைச்சர் துரைமுருகன் கலகலப்பு!

சீனியர் vs ஜூனியர்: அமைச்சரவை மாற்றத்தில் முக்கியத்துவம் உதயநிதிக்கு கொடுக்கப்படும் என்றால், முக்கியமான அமைச்சரவைகளும் முக்கியமான நபர்களுக்கு கொடுக்கிறோம் என அனைவருக்கும் சமன் செய்து கொடுப்பார்கள். அமைர்கள் துரைமுருகன், எ.வ வேலு மற்றும் மற்றவர்களைவிட உதயநிதி ஜூனியர். அப்படி இருக்கும் போது உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுக்கும் போது மற்ற மூத்த அமைச்சர்களை அவமதித்துவிட்டதாக விமர்சனம் வரும்.

அமைச்சர் துரைமுருகன் மற்றும் உதயநிதி ஆகிய இருவரும் துணை முதலமைச்சர் பதவி வழங்கி சமன் செய்ய நினைத்தாலும், இரண்டு பேரும் ஒன்றா? துரைமுருகனுக்கு தகுதி உள்ளது. உதயநிதிக்கு தகுதி உள்ளதா ? என்ற விமர்சனங்களும் வரும். இந்த விமர்சனங்கள் பெரிய பிரச்சனைகளில் முடிந்துவிடக்கூடாது என நினைக்கின்றனர்” என்று ஷபீர் கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.