இத்தாலி:வடக்கு இத்தாலியில் உள்ள ஒரு டவுன் தான் மோனபல்கோன் (Monfalcone). ஏறத்தாழ 30 ஆயிரம் பேர் அந்த டவுனில் வசித்து வருகின்றனர். அதில் மூன்றில் ஒரு பகுதியினர் வெளிநாட்டினர் எனக் கூறப்படுக்கிறது. அதிலும் குறிப்பாக வெளிநாட்டினரில் பெரும்பாலானோர் வங்கதேசத்தை சேர்ந்த இஸ்லாமியர்கள் எனச் சொல்லப்படுகிறது.
வங்கதேசத்தில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக வடக்கு இத்தாலியில் உள்ள மோனபல்கோன் டவுனில் பெருவாரியான வங்கதேச இஸ்லாமியர்கள் குடியேறியதாக சொல்லப்படுகிறது. கடந்த 1990களில் அங்கு நடைபெற்ற துறைமுக பணிகளில் ஈடுபடுவதற்காக குடியேறிய மக்கள் தொடர்ந்து அங்கேயே தங்கிவிட்டனர்.
வெளிநாட்டினரின் வருகை அதிகரிப்பால் உள்நாட்டு மக்களின் கலாசாரம் பெரிய அளவில் மாற்றம் கண்டதாக சொல்லப்படுகிறது. ஆசியாவில் புகழ்பெற்ற விளையாட்டுக்களில் ஒன்றாக காணப்படும் கிரிக்கெட்டும் அங்கு நாளடவையில் புகழ் பெறத் தொடங்கி உள்ளது. பல்வேறு மக்களும் மெது மெதுவாக கிரிக்கெட் விளையாடத் தொடங்கியதாக சொல்லப்படுகிறது.
இதனால் அவ்வூரில் உள்ள பாரம்பரிய விளையாட்டுகள் மெல்ல மெல்ல அழியத் தொடங்கியதாக சொல்லப்படுகிறது. வெளிநாட்டு மக்களால் தங்கள் நாட்டு பாரம்பரியம் மற்றும் கலாசாரம் பெரிய அளவில் அழிக்கப்படுவதாக எனக் கூறிய மோனபல்கோன் மேயர் அன்னா மரிய சிஸ்சின்ட் டவுனுக்கு சொந்தமான பகுதிகளில் இனி யாரும் கிரிக்கெட் விளையாடக் கூடாது என உத்தரவிட்டுள்ளார்.
அப்படி கிரிக்கெட் விளையாட விரும்புபவர்கள் டவுனுக்கு வெளியே சென்று கிரிக்கெட் விளையாடலாம் என்றும் அதையும் மீறி கிரிக்கெட் விளையாடுபவர்களுக்கு 100 யுரோ இந்திய மதிப்பில் ஏற்த்தாழ 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளார். இந்த விசித்திர உத்தரவால் வங்கதேச மக்கள் கடுப்பாகி போன நிலையில், மேயருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. கொலை மிரட்டலை அடுத்து மேயருக்கு 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:Champions Trophy 2025: இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் பயணம்? அமித்ஷா போடும் கண்டிஷன் என்ன? - Amit shah on Champions trophy