தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கு கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமனம்; பாண்டியா விலகல்! - India squad Vs Srilanka - INDIA SQUAD VS SRILANKA

India squad Vs Sri Lanka: இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யகுமார் யாதவ் புகைப்படம்
சூர்யகுமார் யாதவ் (Credits - ANI)

By PTI

Published : Jul 18, 2024, 10:23 PM IST

Updated : Jul 18, 2024, 10:49 PM IST

ஹைதராபாத்: இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜூலை 27ஆம் தேதி தொடங்கி, 28 மற்றும் 30ஆம் தேதிகளில் பல்லேகலே சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. அதேபோல், ஒருநாள் தொடர் ஆகஸ்ட் 2, 4 மற்றும் 7 ஆகிய தேதிகளில் கொழும்பு சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கான 15 பேர் கொண்ட அணியை இந்திய தேர்வுக் குழு இன்று அறிவித்துள்ளது.

இதில் டி20 தொடருக்கு நட்சத்திர பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், ஒருநாள் தொடருக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இரண்டு விதமான போட்டிகளிலும் சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரவீந்திரா ஜடேஜா கடந்த டி20 உலகக் கோப்பையுடன் டி20 போட்டிகளில் தனது ஓய்வை அறிவித்த நிலையில், ஒருநாள் போட்டிக்கு தேர்வு செய்யப்படவில்லை.

இந்நிலையில், விஜய் ஹசாரே கோப்பையில் 7 அரைசதம் கடந்த ரியான் பராக், டெல்லி வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா ஆகியோர் ஒருநாள் அணியில் தேர்வாகியுள்ளனர். உலகக் கோப்பை டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக இருந்த நிலையில், சூர்யகுமார் யாதவ் இலங்கைக்கு எதிரான தொடரில் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஹர்திக் பாண்டியா டி20 தொடரிலிருந்து சொந்த காரணங்களுக்காக விலகியுள்ளார். அதே நேரத்தில் கடந்த வருடம் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்தியா அணி 4-1 என தொடரை கைப்பற்றியது.

தேசிய அணியின் ஒப்பந்தத்தை இழந்த ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுலுடன் ஒருநாள் அணிக்கு விக்கெட் கீப்பராக தேர்வாகியுள்ளார். இது மட்டுமில்லாமல் கௌதம் கம்பீர் இந்தியா பயிற்சியாளராக சந்திக்கும் முதல் தொடர் இதுவாகும். டி20 மற்றும் ஒருநாள் தொடர் இந்தியா அணி பின்வருமாறு;

டி20 அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ரியான் பராக், ரிஷப் பண்ட் (கீப்பர்), சஞ்சு சாம்சன் (கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னாய், அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது, முகமது சிராஜ்.

ஒருநாள் தொடர் அணி: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, கே.எல்.ராகுல் (கீப்பர்), ரிஷப் பண்ட் (கீப்பர்), ஸ்ரேயாஸ் ஐயர், ஷிவம் துபே, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், அக்சர் படேல், கலீல் அகமது, ஹர்ஷித் ராணா.

இதையும் படிங்க:திருப்பூரை திணறடித்த திண்டுக்கல்.. 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி! - TNPL 2024

Last Updated : Jul 18, 2024, 10:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details