அகமதாபாத் : 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் அகமதாபாத்தில் இன்று (மார்ச்.31) நடைபெற்ற 12வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - சன்ரைசஸ் ஐதரபாத் அணிகள் பலப்பரீடை நடத்துகின்றன. டாஸ் வென்ற சன்ரைசஸ் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
மயங்க அகர்வால் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் ஐதராபாத் அணியின் இன்னிங்சை தொடங்கினர். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 34 ரன்கள் சேர்த்தனர். மயங்க் அகர்வால் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து அதிரடி ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் 19 ரன்களி அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.
சீரிய இடைவெளியில் ஐதராபாத் அணியில் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தன. அபிஷேக் சர்மா 29 ரன், எய்டன் மார்க்ராம் 17 ரன் தங்கள் பங்குக்கு ரன்கள் சேர்த்து கொடுத்து ஆட்டமிழந்தனர். இதனிடையே மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் வாண வேடிக்கை காட்டிய ஹென்ரிச் கிளாசென் இந்த முறை சற்று ஏமாற்றம் அளித்தார்.
தன் பங்குக்கு ஹென்ரிச் கிளாசென் 24 ரன்கள் அடித்து கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து களமிறங்கிய ஷபாஸ் அகமது 22 ரன், அப்துல் ஷமாத் 29 ரன்கள் என ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு சன்ரைசஸ் ஐதராபாத் அணி 162 ரன்கள் எடுத்தது. கேப்டன் பேட் கம்மின்ஸ் 2 ரன்களுடன் களத்தில் நின்றார்.
மிடில் ஆர்டர் வரிசையில் பெரிய அளவிலான தாக்கத்தை வீரர்கள் ஏற்படுத்தாதே ரன் வேகம் குறைந்ததற்கான காரணமாகும். குஜராத் அணியை பொறுத்தவரை வேகப்பந்து வீச்சாளர் மோகித் சர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஐதராபாத் அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். மற்றபடி அசமத்துலா ஓமர்சாய், உமேஷ் யாதவ், ரசீத் கான், நூர் அகமது ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
163 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்கை நோக்கி குஜராத் அணி விளையாடுகிறது. இலக்கு பெரியளவில் கடினமானது இல்லை என்பதால் ஆட்டத்தில் குஜராத்தின் கை ஓங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க :பாகிஸ்தான் ஒயிட் பால் கேப்டனாக பாபர் அசாம் நியமனம்! ஷாகீன் ஷா அப்ரிடி நீக்கத்திற்கு என்ன காரணம்? - Babar Azam