அகமதாபாத்: ஐபிஎல் தொடரின் 71வது போட்டி இன்று (மே 19) அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதி சுற்றுக்கு முன்னேறும். இந்த போட்டியில் தோல்வியடையும் அணி குவாலிபையர் 2இல் விளையாடும்.
இந்நிலையில், இப்போட்டிக்கான டாஸ் வீசப்பட்டது. இதில், டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, நிதிஷ் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென்(விக்கெட் கீப்பர்), அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், விஜயகாந்த் வியாஸ்காந்த், டி நடராஜன்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், ரமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி.
இதையும் படிங்க:ஐபிஎல் தொடரில் எந்த அணி வெற்றி பெற்றாலும் தமிழருக்கு பெருமை தான்.. எப்படி தெரியுமா? - TAMILNADU CRICKETERS IN IPL