ஹைதராபாத்: நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. பிளே ஆஃப் சுற்று நாளை மறுநாள் தொடங்கவுள்ள நிலையில், அதற்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தகுதியாகி உள்ளது.
இந்த நிலையில், இத்தொடரின் லீக் ஆட்டம் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியே முதலில் பேட்டிங் செய்தது.
சிறப்பாக விளையாடிய அந்த அணி, 20 ஓவர்கள் முடிவில் 214 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 71, ரோசோவ் 49, அதர்வ தைடே 46 மற்றும் ஜிதேஷ் சர்மா 32 ரன்கள் எடுத்தனர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சார்பில் அதிகபட்சமாக நடராஜன் 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
இதனைத் தொடர்ந்து, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கி விளையாடிது. இந்த சீசன் முழுவதும் சிறப்பாக விளையாடி வந்த ஹைதராபாத் தொடக்க கூட்டணிக்கு, பஞ்சாப் அணி முதல் பந்தே அதிர்ச்சியைக் கொடுத்தது. டிரவிஸ் ஹெட் அர்ஷதீப் சிங் வீசிய முதல் பந்திலேயே போல்ட் ஆகி வெளியேறினார்.