லக்னோ: ஐபிஎல் தொடரின் 54வது போட்டி இன்று லக்னோ எக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி வருகின்றன.
இதில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களான பிலிப் சால்ட் மற்றும் சுனில் நரைன் நல்ல தொடக்கத்தையே கொல்கத்தா அணிக்கு கொடுத்தனர்.
சிறப்பாக விளையாடி வந்த கூட்டணி, நவின்-உல்-அக் பந்து வீச்சில் பிரிந்தது. பிலிப் சால்ட் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் ரகுவன்சி - நரைனுடன் கைக்கோர்க்க, கொல்கத்தா அணிக்கு ரன்கள் எகிறியது. ரகுவன்சி சிங்கிள் எடுத்து, அவ்வப்போது பவுண்டரிகள் அடிக்க, மறுபக்கம் நரைன் அதிரடியாக விளையாடினார்.