தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ind vs nz test: நியூசிலாந்து 259 க்கு ஆல் அவுட்.. 7 விக்கெட்டுகளை வீழ்த்தி வாஷிங்டன் சுந்தர் அபாரம்!

வாஷிங்டன் சுந்தர் மற்றும் அஸ்வினின் அபார பந்துவீச்சால் 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 259 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது நியூசிலாந்து அணி.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணி வீரர்கள் கோப்புப்படம்
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணி வீரர்கள் கோப்புப்படம் (Credit - ap)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 5 hours ago

புனே:இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரி விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தி வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லாதம் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் கே.எல்.ராகுல், குல்தீப் யாதவ் மற்றும் சிராஜ் ஆகிய வீரர்களுக்கு பதிலாக சுப்மன் கில், ஆகாஸ் தீப் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

உலக டெஸ்ட் சாம்பியன்சிப் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்றால் இந்திய அணி வரவிருக்கும் போட்டிகளில் கூடுதல் கவனம் செலுத்தி விளையாட வேண்டும். இந்த இக்கட்டான சூழ்நிலையில் களத்தில் கொண்டு களமிறங்கியது இந்தியா.

இதையும் படிங்க:டி20 போட்டியில் வரலாற்று சாதனை படைத்த ஜிம்பாப்வே!

259 ஆல்- அவுட்:கடந்த முறை போல் இந்த முறை நியூசிலாந்து அணி நங்குரமிட்டு ரன்களை சேர்ப்பார்கள் என நினைத்துக் கொண்டு இருக்க, பந்தை சுழன்ற ஆரம்பித்தது இந்தியா அந்த அணியின் கேப்டன் டாம் லாதம் 15 ரன் , கான்வே 76 ரன் , வில் யங் 18 ஆகிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தினார்.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் அணியில் களமிறங்கப்பட்ட வாஷிங்டன் சுந்தர், நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திர, டேரில் மிட்செல், டாம் ப்ளன்டெல் மற்றும் க்ளென் பிலிப்ஸ் உள்ளிட்ட மிடில் ஆர்டர்களை துவம்சம் செய்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனால் 259 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது நியூசிலாந்து அணி. இதில் அதிகபட்சமாக கான்வே 76 ரன், ரச்சின் ரவீந்திரா 65 ரன் மிட்செல் சான்ட்னர் 33 ரன்கள் விளாசினார். முதல் டெஸ்ட் போட்டியில் சொதப்பிய இந்திய அணி 2வது டெஸ்ட் போட்டியில் கம்போக் கொடுத்துள்ளது.

அஸ்வின் சாதனை:இந்த போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், ஆல் டைம் டெஸ்ட் கிரிக்கெட் பவுலர்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் லயனை (530), அஸ்வின்(531)முந்தியுள்ளார்.

வாஷிங்டன் சுந்தர்: இந்திய அணியி ஏற்கனவே குல்தீப் யாதவ், அக்சார் பட்டேல், ஜடேஜா மற்றும் அஸ்வின் என 4 சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்கும் போது 5ஆவதாக ஒரு சுழற்பந்து வீச்சாளர் தேவையா? என பலரும் விமர்சனம் செய்தனர். ஆனால் அதற்கெல்லாம் பதிலடி தரும் வகையில் இந்த போட்டியில் விளையாடியுள்ளார் வாஷிங்டன் சுந்தர்.

ABOUT THE AUTHOR

...view details