ஐதராபாத்:உலக அங்கீகாரம் பெற்ற விளையாட்டு தொடர் என்றால் அது ஒலிம்பிக். ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பது பல விளையாட்டு வீரர் வீராங்கனைகளின் வாழ்நாள் கனவாக உள்ளது. குறிப்பிடத்தக்க வகையிலான வீரர்களுக்கே ஒலிம்பிக் தொடரில் விளையாடும் வாய்ப்பு என்பது கிடைக்கிறது.
அதிலும் சிலரே ஒலிம்பிக் போட்டியில் தங்களுக்கு என தனி முத்திரையை பதிக்கின்றனர். அப்படி தனக்கு என தனி வழித்தடத்தை உருவாக்கிய வீரர்களில் ஒருவர் தான் அமெரிக்காவை சேர்ந்த நீச்சல் வீரர் மைக்கெல் பெல்ப்ஸ். ஒலிம்பிக் போட்டியில் இதுவரை 28 பதக்கங்களை வென்று வரலாறு படைத்து உள்ளார் மைக்கெல் பெல்ப்ஸ்.
அதில் 28 தங்கம், 3 வெள்ளி மற்றும் இரண்டு வெணகலப் பதக்கங்களை வென்று மைக்கெல் பெல்ப்ஸ் சாதனை படைத்துள்ளார். அதிலும் குறிப்பாக ஒலிம்பிக் வரலாற்றில் 162 நாடுகள் கைப்பற்றிய தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கையை காட்டிலும், மைக்கெல் பெல்ப்ஸ் வென்ற தங்கப் பதக்கத்தின் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒலிம்பிக் போட்டியில் இந்தியா இதுவரை 10 தங்கப் பதக்கங்களை மட்டுமே வென்று உள்ளது. மைக்கெல் பெல்ப்ஸ் வாங்கிய தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது இந்தியா வென்ற தங்க பதக்கங்களின் எண்ணிக்கை பாதிக்கும் குறைவு என்பது குறிப்பிடத்தகக்து.