தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இந்திய அணிக்கு 162 ரன்கள் வெற்றி இலக்கு.. குசல் பெரேரா அதிரடி அரை சதம்! - IND VS SL 2ND T20I 2024

IND VS SL: இந்திய அணிக்கு எதிரான டி20 ஒருநாள் தொடரில் இலங்கை அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ரன்களை எடுத்துள்ளது. இதில் குசல் பெரேரா அதிரடியாக விளையாடி அரை சதத்தை பதிவு செய்தார்.

இந்திய அணி
இந்திய அணி (Credits - ANI)

By ETV Bharat Sports Team

Published : Jul 28, 2024, 10:04 PM IST

பல்லேகலே:இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. அந்த வகையில் இன்று இரண்டாவது போட்டி தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக நிஸ்ஸங்க - குசல் மெண்டிஸ் ஜோடி களமிறங்கியது. முதல் ஓவரிலேயே இருவரும் தங்களது பவுண்டரிகளை பதிவு செய்தனர். தொடக்கத்தில் இருவரும் பவுண்டரியை விளாசி அணிக்கு ஸ்கோரினை குவித்தனர். இதற்கிடையில், அர்ஷதீப் சிங் வீசிய அபார பந்தைச் சமாளிக்க முடியாமல் குசல் மெண்டிஸ் ஆட்டமிழந்தார்.

அதன் பின், குசல் பெரேரா நிஸ்ஸங்காவிற்கு உறுதுணையாக கைகோர்க்க இருவரும் இணைந்து அணிக்கு ரன்கள் குவிக்க ஆரம்பித்தனர். இந்நிலையில், ரவி பிஷ்னோய் வீசிய பந்தில் நிஸ்ஸங்க எல்பிடபிள்யூ ஆனார். பின்னர் களம் கண்ட மெண்டிஸ் 26 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழக்க, இலங்கை அணியின் கேப்டன் குசல் பெரேரா உடன் கைகோர்த்தார்.

சிறப்பாக விளையாடிய குசல் பெரேரா ஆட்டமிழக்க, அடுத்து வந்த வனிந்து ஹசரங்க, தசுன் ஷனக இருவரும் டக் அவுட் ஆக இரு விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து இலங்கை அணி திணறியது. 20 ஓவர்கள் முடிவிற்கு 161 ரன்களைக் குவித்தது.

இந்த போட்டியில் இலங்கை அணியில் குசல் பெரேரா அதிகபட்சமாக 53 ரன்களும், நிஸ்ஸங்க 32 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில், ரவி பிஷ்னோய் 3 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா, அர்ஷதீப் சிங், அக்சர் பட்டேல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: மகளிர் ஆசியக்கோப்பையில் இந்தியா போராடி தோல்வி.. வெற்றிக் களிப்பில் இலங்கை! - womens asia cup final

ABOUT THE AUTHOR

...view details