தேனி: எட்டு வயதிற்கு மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி வழங்கி சிறந்த கால்பந்தாட்ட வீரர்களை உருவாக்க திட்டமிடப்பட்டு, உலக அளவில் கால்பந்தாட்ட வீரர்களை உருவாக்கிய ஸ்பெயின் நாட்டின் லாலிகா கால் பந்தாட்ட பயிற்சி நிறுவனம், தேனியில் தனியார் பள்ளியுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
ஸ்பெயின் நாட்டில் நூறாண்டுகளுக்கு மேலாக லாலிகா கால் பந்தாட்ட பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. உலக அளவில் கால்பந்தாட்ட வீரர்களை உருவாக்கிய லாலிகா கால்பந்தாட்ட பயிற்சி மையம், இந்தியாவில் பல்வேறு தனியார் பள்ளிகளில் ஒப்பந்தம் போட்டு கால்பந்தாட்ட பயிற்சி வழங்கி வருகிறது.
தனியார் பள்ளியுடன் ஒப்பந்தம்: இந்த நிலையில், தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் செயல்படும் கல்விக் குழும பள்ளியுடன், ஸ்பெயின் நாட்டின் லாலிகா கால்பந்து பயிற்சி மையம் ஒப்பந்தம் போடப்பட்டு, நேற்று துவக்க விழா நடைபெற்றது. இதில் லாலிகா கால்பந்தாட்ட பயிற்சி மையத்தின் தொழில்நுட்ப பயிற்சியாளர் மிகுவல் காசல், பெரியகுளத்தில் உள்ள கல்விக் குழும பள்ளிக்கு வந்து குத்துவிளக்கேற்றி லாலுகா கால் பந்தாட்ட பயிற்சி மையத்தின் பயிற்சி குறித்து விளக்கினார்.
இதையும் படிங்க:AIR Show பார்க்க மெரினா போறீங்களா? தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!