நியூயார்க்: 9வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த ஜூன் 2ஆம் தேதி தொடங்கி ஜூன் 29ஆம் தேதி வரை பல உலக நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஜூன்.10) நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் 20வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பரிக்கா - வங்காள தேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.
தென்னாப்பிரிக்கா ப்ளேயிங் ஸ்குவார்ட்: ரீசா ஹென்ட்ரிக்ஸ், குயின்டன் டி காக் (WK), ஐடன் மார்க்ரம் (C), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், கேசவ் மகராஜ், ககிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே, ஒட்னீல் பார்ட்மேன்