தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

அதிரடி காட்டிய துபே - ருதுராஜ் கூட்டணி.. மும்பை அணிக்கு 207 ரன்கள் இலக்கு! - shivam dube Ruturaj partnership - SHIVAM DUBE RUTURAJ PARTNERSHIP

CSK vs MI: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்துள்ளது.

Mumbai
Mumbai

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 14, 2024, 9:45 PM IST

மும்பை: ஐபிஎல் தொடரின் 29வது போட்டி இன்று (ஏப்.14) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்த தொடரின் தொடக்கம் முதலே ஒன் டவுனில் களம் கண்ட ரஹானே இப்போட்டியில் தொடக்க வீரராக களம் இறக்கப்பட்டார். ஆனால் அவர் பெரிதாக சோபிக்கவில்லை. 5 ரன்கள் எடுத்த நிலையில், ஜெரால்ட் கோட்ஸி பந்து வீச்சில் ஹர்திக் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இதனைத் தொடர்ந்து ரச்சின் ரவீந்தரா 21 ரன்களில் ஆட்டமிழக்க, ஷிபம் துபே - ருதுராஜ் கெய்க்வாட் கூட்டணி கைக்கோர்த்தது. இந்த கூட்டணி அதிரடியாக விளையாடியது. ஒவர்களிக்கு ஒர் இரு ஃபோர், சிக்சர்களுடன், 7 ரன் ரேட்டில் இருந்த சென்னை அணியை 10 ரன் ரேட்க்கு உயர்த்தினர்.

கேப்டன் ருதுராஜ் அரைசதம் கடக்க, அவரை பின் தொடர்ந்து துபேவும் அரைசதம் விளாசினார். இருவரும் பும்ரா ஓவர்களை தவிர்த்து மற்ற பந்து வீச்சாளர்களின் பந்தை குறிவைத்து தாக்கி ரன்களை சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய ருதுராஜ் 69 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

பின்னர் டேரில் மிட்செல் 17 ரன்களில் ஆட்டமிழக்க, இறுதி ஓவரில் தோனி களம் இறங்கி 4 பந்துகளில் 20 ரன்களை குவித்தார். இதனால் சென்னை அணி 206 ரன்கள் எடுத்தது. தோனி 20 ரன்களிலும், துபே 66 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

மும்பை அணி சார்பில் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்களும், ஷ்ரேயாஸ் கோபால் மற்றும் கோட்ஸி தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணி 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கி விளையாடி வருகிறது.

இதையும் படிங்க:லக்னோவை ஊதித் தள்ளிய கொல்கத்தா... பிலிப் சால்ட், ஸ்ரேயாஸ் ஐயர் அபார ஆட்டம்! - IPL 2024 KKRvs LSG Match Highlights

ABOUT THE AUTHOR

...view details