ஐதராபாத்: முன்னாள் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி உதவ வேண்டும், இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு எதிராக குரல் எழுப்பியதால் தனக்கு பலவகையில் இருந்து மிரட்டல்கள் வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், பாலியல் புகாரில் சிக்கிய இந்திய மல்யுத்த சம்மேளனத்தை இடைநீக்கம் செய்த போதும், அது தொடர்ந்து இயங்கி வருவதாகவும், நீதமன்றத்தின் உத்தரவுகளை பின்பற்றாமல் இந்திய மல்யுத்த சம்மேளனம் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் சாக்ஷி மாலிக் வீடியோவில் தெரிவித்துள்ளார்.
கடந்த அண்டு நடைபெற்ற இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தேர்தலில் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கின் ஆதிக்கத்தையும், அராஜ போக்கையும் அனைவரும் காண முடிந்ததாகவும், அதனால் தனக்கு பல வகையில் இருந்தும் மிரட்டல் விடுக்கப்பட்டு மல்யுத்த விளையாட்டில் இருந்து வெளியேற காரணமானதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாலியல் புகார் காரணமாக மத்திய அரசு இந்திய மல்யுத்த சம்மேளனத்தை இடைநீக்கம் செய்த போதும், உத்தரவை மீறி தொடர்ந்து இயங்கி வருவதாகவும் கூறியுள்ளார். தற்போது இளம் வீரர்கள் மல்யுத்த விளையாட்டை நம்பி வரும் நேரத்தில் இந்திய மல்யுத்த சம்மேளனம் சரியான முறையில் இயங்க வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.
அரசால் இடைநீக்கம் செய்யப்பட்ட இந்திய மல்யுத்த சம்மேளனம் எப்படி இயங்க முடியும் என கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம் தொடர்ந்து சம்மேளனம் இயங்க தடை விதித்ததாகவும் இருப்பினும், நீதிமன்றத்தின் உத்தரவை மீறி இந்திய மல்யுத்த சம்மேளனம் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் சாக்ஷி மாலிக் தெரிவித்துள்ளார்.
பிரிஜ் பூஷன் சிங் ஆதிக்கம் செலுத்தும் கூட்டமைப்பின் கீழ் வீராங்கனைகளின் எதிர்காலம் பாதுகாப்பாக இருப்பதாக பிரதமர் மோடி கருதினால், இடைநீக்கத்தை நீக்க வேண்டும் என்றும் இல்லையெனில் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் சாக்ஷி மாலிக் தெரிவித்துள்ளார். பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிரான குரல் எழுப்பிய காரணத்தால் அவர் தொடர்புடைய பல்வேறு தரப்பில் இருந்தும் தனக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாக சாக்ஷி மாலிக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க:சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்: 2வது சுற்றில் விதித் குஜ்ராத்தி தோல்வி!