ஐதராபாத்:ஓய்வு பெற்ற போதும் கிரிக்கெட்டின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக சச்சின் தெண்டுல்கர் இருக்கிறார். தற்போதைய பேட்ஸ்மேன்கள் கூட சச்சின் தெண்டுல்கரின் பேட்டிங் ஸ்டைல் குறித்து பெரிதும் பேசும் அளவுக்கு அவரது பேட்டிங் திறன் உள்ளது. சரியான நேரத்தில் ஷாட்டுகளை அடிப்பது உள்ளிட்ட சச்சினின் பேட்டிங் நுணுக்கங்கள் இன்றைய கால இளம் வீரர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்நிலையில், தனடு காலத்தில் ரிவர்ஸ் ஸ்விங் வீசக் கூடிய பந்துவீச்சாளர்களை எவ்வாறு சமாளித்து ரன்களை குவித்தேன் என்பது குறித்து சச்சின் தெண்டுல்கர் மனம் திறந்துள்ளார். சர்வதேச அளவில் வாக்கர் யூனிஸ், வாசிம் அக்ரம், டெல் ஸ்டெயின், ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் உமர் குல் ஆகிய ரிவர்ஸ் ஸ்வீங் பந்துவீசக் கூடிய வீரர்களை சச்சின் தெண்டுல்கர் எதிர்கொண்டுள்ளார்.
இந்நிலையில், ரிவர்ஸ் ஸ்விங் முறையை எப்படி எதிர்கொள்வது, அதற்காக எவ்வாறு பயிற்சி எடுக்க வேண்டும் என சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, "ரிவர்ஸ் ஸ்விங்கை நன்றாக விளையாடுவதற்கு பந்தின் ஒரு பக்கத்தை சுற்றி டேப்பை சுற்றிக் கொண்டேன்.