ஐதராபாத்:வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி எதிர்பார்த்த அளவிற்கு செயல்படவில்லை. குறிப்பாக நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் 6 இன்னிங்ஸ்களில் விளையாடி ஒரு அரை சதம் உள்பட வெறும் 93 ரன்களை மட்டுமே விராட் கோலி எடுத்தார்.
இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் விராட் கோலி எப்படி சமாளிப்பார் என்ற விமர்சனங்கள் எழத் தொடங்கின. இதனை காரணமாக வைத்து ஆஸ்திரேலியா ஜாம்பவான்கள் பலரும் தங்களின் விமர்சனங்களை முன் வைக்க தொடங்கினர். அப்போது ரிக்கி பாண்டிங், கடந்த 5 ஆண்டுகளில் விராட் கோலி வெறும் 2 சதங்களை மட்டுமே அடித்துள்ளார்.
வேறு எந்த டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருந்தாலும், இத்தனை காலம் ஒரு அணியில் வாய்ப்பு கொடுத்திருக்க மாட்டார்கள். ஆனால் விராட் கோலி ஆஸ்திரேலியாவில் சிறப்பாக விளையாடுவார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான விளையாடுவதை விராட் கோலி அதிகம் விரும்பக் கூடியவர் என்று கூறியிருந்தார்.
விராட் கோலியை மனதளவில் பலவீனப்படுத்தும் முயற்சியாகவே ரிக்கி பாண்டிங் விமர்சனங்கள் பார்க்கப்பட்டன. இதற்கு இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் நேரடியாக பதில் அளித்தார். அதில், இந்திய கிரிக்கெட்டில் ரிக்கி பாண்டிங்கிற்கு என்ன வேலை இருக்கிறது. ஆஸ்திரேலியா அணியை பற்றி கவலை கொள்ளட்டும்.