IND Vs ENG Test: 3வது டெஸ்ட்டில் இருந்து அஸ்வின் விலகல்? என்ன காரணம்? - Ashwin Withdraws from england test
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகியதாக தகவல் வெளியாகி உள்ளது.
Etv Bharat
Published : Feb 16, 2024, 11:05 PM IST
ராஜ்கோட்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகியதாக தகவல் வெளியாகி உள்ளது. குடும்ப மருத்துவ அவசரநிலை காரணமாக ரவிச்சந்திரன் அஸ்வின் விலகியதாக பிசிசிஐ தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் சாதனை படைத்து இருந்தார்.