டெல்லி: 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (மே.7) இரவு 7.30 மணிக்கு தலைநகர் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் 56வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் களம் காணுகின்றன.
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். நடப்பு சீசனில் விளையாடிய 10 ஆட்டங்களில் 8ல் வெற்றிப் பெற்று 16 புள்ளுகளுடன் ராஜஸ்தான் அணி புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதேபோல் டெல்லி விளையாடிய 11 ஆட்டங்களில் 5ல் மற்றும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.
இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தும் பட்சத்தில் புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களுக்குள் நுழைந்து பிளே ஆப் வாய்ப்பில் டெல்லி அணி தொடரும். அதேநேரம் ராஜஸ்தான் அணி வெற்றி பெறும் பட்சத்தில் டெல்லி அணியின் பிளே ஆப் வாய்ப்பு சற்று குறைவு தான். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறி பிளே ஆப் சுற்று வாய்ப்பை ராஜஸ்தான் அணி உறுதி செய்யும்.