கவுகாத்தி: 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (மே 15) ராஜஸ்தான் ராயல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி கவுகாத்தியில் வைத்து நடைபெறுகிறது. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக, டாம் கோஹ்லர் - ஜெய்ஸ்வால் ஜோடி களமிறங்க, முதல் ஓவரிலேயே ஜெய்ஸ்வால் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, சஞ்சு சாம்சன் களம் கண்டார். பவர் பிளே முடிவில் 38-1 என்ற கணக்கில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியது.
7வது ஓவர் தொடக்கத்தில் சஞ்சு சாம்சன் நாதன் எலிஸ் வீசிய பந்தை ராகுல் சாஹரிடம் கொடுத்து அவுட் ஆக, ரியான் பராக் களம் கண்டார். ஏற்கனவே களத்தில் இருந்த கோஹ்லர் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, ரவிச்சந்திரன் அஸ்வின் களம் கண்டார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்து திணறியது. 10 ஓவர் முடிவிற்கு 68-3 என்ற கணக்கில் விளையாடியது. பராக் - அஸ்வின் காம்போ சிறப்பாக விளையாட, அஸ்வின் வெறும் 28 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.