ஐதராபாத்:பஞ்சாப் கிங்ஸ் அணியை பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா, தொழிலதிபர்கள் மொகித் புர்மன், நெஸ் வாடியா ஆகியோர் நிர்வகித்து வருகின்றனர். இவர்கள் மூவரிடமே பஞ்சாப் கிங்ஸ் அணியின் அதிகப்படியான பங்குகள் உள்ளன. இந்நிலையில், சக உரிமையாளர்களில் ஒருவரான மொகித் புர்மன் மீது நடிகை பிரீத்தி ஜிந்தா சண்டிகர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில் பஞ்சாப் கிங்ஸ் அணி உரிமையாளர்களில் ஒருவரான மொகித் புர்மன் தனது பங்குகளை இதர முதலீட்டாளர்களிடம் விற்க திட்டமிட்டு உள்ளதாகவும், தனக்கு தெரிவிக்காமல் மொகித் புர்மன் பங்குகளை விற்க அனுமதிக்கக் கூடாது என்றும் பிரீத்தி ஜிந்தா சண்டிகர் உயர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.
அதேநேரம் பிரீத்தி ஜிந்தாவின் இந்த புகாருக்கு மொகித் புர்மன் மறுப்பு தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. தன்னிடம் உள்ள அணியின் பங்குகளை அவர் விற்க திட்டமிடவில்லை எனக் கூறியதாகவும் சொல்லப்படுகிறது. பஞ்சாப் கிங்ஸ் அணியை பொறுத்தவரை உரிமையாளர்களில் ஒருவர் தனது பங்குகளை விற்க விரும்பினால் முதலில் அதை சக உரிமையாளர்களிடம் தெரிவிக்க வேண்டும்,