ETV Bharat / state

பொங்கல் பண்டிகை வரை தமிழ்நாட்டில் மழை தானாம்! - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்! - TN RAIN LATEST UPDATE

பொங்கல் பண்டிகை வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், பொங்கலுக்கு பிறகே வடகிழக்கு பருவமழை விலகுவது குறித்து தெரிய வரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குர் பாலசந்திரன் கூறியுள்ளார்.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன்
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் (Credits - ETV Bharat tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 31, 2024, 8:13 PM IST

சென்னை: தமிழகத்தில் பொங்கலுக்கு பிறகே வடகிழக்கு பருவமழை விலகுவது குறித்து தெரிய வரும் எனவும், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காலத்தில் நெல்லை மாவட்டத்திலும், வடகிழக்கு பருவமழை காலத்தில் ஆறு மாவட்டங்களிலும் இயல்பைவிட அதிகமழை பெய்துள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குர் பாலசந்திரன் கூறினார்.

இந்தாண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் இயல்பைவிட 28 சதவீதம் மழை அதிகமாக பதிவாகி உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் நுங்கம்பாக்கத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 2024 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பெய்த மழை நிலவரம் குறித்து அவர் கூறியதாவது:

தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் 2024 ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் பதிவான மொத்த மழை அளவு 1,179 மி.மீ.

இதில், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் 52 மிமீ, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் 147 மிமீ மழையும் பதிவானது. ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவமழை காலத்தில் 389 மிமீ மழையும், அக்டோபர், நவம்பர், டிசம்பர் வரையிலான வடகிழக்கு பருவமழைக் காலத்தில் 590 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது என்று பாலசந்திரன் தெரிவித்தார்.

அதிக மழை: தமிழகம் மற்றும் புதுவையில் 2023 ஆம் ஆண்டைவிட 2024 இல் 143 மில்லி மீட்டர் அதிகமாக மழை பதிவாகி உள்ளது. கடந்த ஆண்டு பதிவான மொத்த மழையளவு 1,036 மில்லி மீட்டர். தென்மேற்கு பருவ மழை காலத்தில் 18 சதவீதமும், வடகிழக்கு பருவமழை காலத்தில் 33 சதவீதமும், ஆண்டுக்கணக்கில் 28 சதவீதமும் இயல்பை விட அதிகமாக மழை பொழிந்துள்ளது.

தென்மேற்கு பருவமழை காலத்தில் செப்டம்பர் மாதத்தை தவிர பிற மாதங்களில் 2024 இல், 2023ஐ விட மழை சற்று அதிகமாக பதிவாகியுள்ளது. செப்டம்பர் மாதத்தில் இயல்பைவிட 64% குறைவாக பதிவாகியுள்ளது.

வடகிழக்கு பருவமழை காலத்தில் அக்டோபர் மாதத்தில் 216 மில்லி மீட்டர் மழையும், நவம்பர் மாதத்தில் 140 மில்லி மீட்டர் மழையும், டிசம்பர் மாதத்தில் 235 மில்லி மீட்டர் மழையும் மொத்தமாக பருவ காலத்தில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை காலகட்டத்தில் 589 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

நெல்லையில் அதிக மழை: ஃபெஞ்சல் புயலால் மழை கிடைத்தாலும் 11 டிசம்பர் முதல் 14 டிசம்பர் வரை காலகட்டத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பரவலாக பெரும்பான்மையான நேரங்களில் அதிக கனமழையும் மிக கனமழையும் பெய்தது.

மாவட்ட அளவில் தென்மேற்கு பருவமழை காலத்தில் நெல்லை மாவட்டத்தில் அதிக மழை பதிவானது. அதாவது இயல்பைவிட 265 சதவீதம் அதிகமாக மழை பதிவாகி உள்ளது. 16 மாவட்டங்களில் இயல்பைவிட அதிகமாகவும், 17 மாவட்டங்களில் இயல்பை ஒட்டியும், 6 மாவட்டங்களில் இயல்பை விட குறைவாகவும் மழை பதிவாகியுள்ளது.

வடகிழக்கு பருவமழை காலத்தை பொறுத்த வரை நெல்லை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், விழுப்புரம் ஆகிய ஆறு மாவட்டங்களில் இயல்பைவிட மிக அதிகமாகவும் 23 மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாகவும் 11 மாவட்டங்களில் இயல்பை ஓட்டியும் மழை பதிவாகியுள்ளது.

ஆண்டுக்கணக்கை பொறுத்தவரை 2024 இல் எந்த மாவட்டத்திலும் அதன் நிகழ்வைவிட குறைவாக மழை பதிவாகவில்லை. 2024 இல் அரபிக்கடல் மற்றும் வங்கக் கடலில் ரெமல், அஸ்னா, டானா, ஃபெஞ்சல் உள்ளிட்ட ஆறு புயல்கள் உருவாகின என்றும் பாலசந்திரன் கூறினார்.

பொங்கல் வரை மழைக்கு வாய்ப்பு: மேலும், தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. வடகிழக்கு பருவமழை விலகுவது குறித்து பொங்கலுக்கு பிறகே தெரியவரும்.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த இரண்டு, மூன்று தினங்கள் குறிப்பாக 7 ஆம் தேதி முதல் தமிழகத்தில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று பாலசந்திரன் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.